MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தபால் துறையின் சூப்பர்ஹிட் திட்டம்! 12 ஆயிரம் டெபாசிட் செய்தால் ஒரு கோடியாக மாறும்!

தபால் துறையின் சூப்பர்ஹிட் திட்டம்! 12 ஆயிரம் டெபாசிட் செய்தால் ஒரு கோடியாக மாறும்!

பணத்தை சரியாக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பல திட்டங்கள் தபால் துறையில் உள்ளன. தபால் துறை வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் அத்தகைய திட்டமாகும். இந்தத் திட்டம் நீண்ட காலத்திற்கு பெரிய பலனைக் கொடுக்கக்கூடியது ஆகும்.

2 Min read
Author : SG Balan
| Updated : Mar 28 2023, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் நீங்கள் செய்யும் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது. இது சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. இத்திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. காலாண்டு தோறும் வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படும். இத்திட்டத்துக்கு தற்போது 7.1 சதவீத வருடாந்திர வட்டி கொடுக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கை தபால் அலுவலகம் அல்லது வங்கி கிளையில்  தொடங்கலாம். இந்தக் கணக்கை வெறும் 500 ரூபாயில் ஆரம்பிக்கலாம். ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்தக் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனால், முதிர்ச்சியடைந்த பிறகு, ஐந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

36

இத்திட்டத்தில் மாதம் ரூ.12,500 வீதம் 15 ஆண்டுகள் டெபாசிட் செய்துவந்தால், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.40.68 லட்சம் கிடைக்கும். இதில், செலுத்தப்பட்ட மொத்த முதலீடு ரூ.22.50 லட்சமாக இருக்கும். ரூ.18.18 லட்சம் மூலம் கிடைத்த வருமானமாக இருக்கும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதத்தைக் கருத்தில் கொண்டு இந்தக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டி விகிதம் மாறும்போது முதிர்வுத்தொகை மாறலாம்.

46

இந்தத் திட்டத்தின் மூலம் கோடீஸ்வரர் ஆக விரும்பினால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் இரண்டு முறை 5 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர வேண்டும். இப்படிச் செய்லாத் 25 ஆண்டுகள் முதலீட்டுக்குப் பின்பு மொத்தமாக ரூ.1.03 கோடி கிடைக்கும். இதில் மொத்த முதலீடு ரூ.37.50 லட்சம் ஆகும். மீதி ரூ.65.58 லட்சம் வட்டி மூலம் ஈட்டியதாக அமையும்.

56

இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை மேலும் நீட்டிக்க விரும்பினால், முதலீடு முதிர்ச்சி அடைவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பே விண்ணப்பம் செய்யவேண்டும் என்பது அவசியம். முதிர்வடைந்த பிறகு கணக்கை நீட்டிக்க முடியாது.

66

இந்தத் இத்திட்டதிட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச்சலுகையை வழங்குகிறது. அதன் மூலம் இத்திட்டத்தில் செய்யப்படும் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு விலக்கு பெறலாம். இதுமட்டுமின்றி வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தபால் அலுவலகத் திட்டம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
RAC டிக்கெட் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்.. ரயில் கிளம்பிய பிறகும் பெர்த் கிடைக்கும்!
Recommended image2
ரெப்போ ரேட் உயர்வு எதிரொலி: பல்டி அடிக்கும் வீட்டு கடன் இ.எம்.ஐ; முழு விவரம்!
Recommended image3
Aadhaar Name Update: ஆதார் அட்டையில் கணவர் பெயரை சேர்க்கணுமா? திருமணமான பெண்கள் இதை தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved