கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, பெங்களூருவில் தனது வீட்டுக்கு வெளியே வைத்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரு அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு, 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் தபோல்கர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அதேபோல, 2015ஆம் ஆண்டு கோவிந்த் பன்சாரே மற்றும்  எம்.எம்.கல்பூர்கி சுட்டுக்கொன்றனர். இவர்கள் அனைவருமே, இடதுசாரி சிந்தனையாளர்கள் என்பதால், கொலைகள் நடுவே ஏதோ இணைப்பு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகத்தால் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் முக்கிய குற்றவாளியான சரத் கலாஸ்கர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து சரத் கலாஸ்கர்  பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதுகுறித்து கர்நாடக காவல்துறையிடம் சரத் கலாஸ்கர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தபோல்கரை தான்தான் சுட்டுக் கொன்றதாகவும், கவுரி லங்கேஷ் கொலையில் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், 2016 ஆகஸ்ட்டில், பெல் காமில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அதில் கவுரி லங்கேஷ் பெயரும் இடம்பெற்றிருந்தது. எனவே, கவுரி லங்கேஷ் கொல்லப்பட வேண்டும் என்று அக்கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.  

இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாரத் குர்னே என்பவர் வீட்டில் நடந்த அடுத்த கூட்டத்தில், கொலை பற்றி விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு பாரத் குர்னே வீட்டின் அருகில் உள்ள மலைக்குச் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டோம். இந்த பயிற்சியில் ஒவ்வொருவரும் 15 முதல் 20 தோட்டாக்களை சுட்டு பயிற்சி எடுத்தோம். இந்த கொலை சம்பவம் அல்லது நிகழ்வு என்று குறியீட்டு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பின்னர், அமோல் காலே அனைவரையும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பச் சொன்னார், ஈவண்ட் நாளில் மட்டுமே திரும்பி வர வேண்டும் என்று கூறினார். கவுரி லங்கேஷை சுட்டுக் கொன்றது 26 வயதேயான, பரசுராம் வாங்மேர் தான். கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய் யப்பட்ட பிறகு, ஆதாரத்தை அழிக்கும் நோக்கத்தில், அந்த துப்பாக்கியை தனித்தனியாக பிரித்து, மும்பை - நாசிக் நெடுஞ்சாலைக்கு அருகே ஒரு சின்ன ஓடையில் 3 பகுதிகளில் வீசி எறிந்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.