20 வயது இளைஞன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரத்தால் பரபரத்துகிடக்கிறது ஈரோடு. அந்த வாலிபரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். 

ஈரோடு மாவட்டம், சென்னி மலையை சேர்ந்த, இளவரசன் 20, பேஷன் டெக்னாலஜி முடித்துள்ளார். தனது தெருவில் எட்டாம் வகுப்பு பயிலும் 14 வயதுதான சிறுமியிடம் ஆறு மாதமாக பழகியுள்ளார். அண்ணன் தங்கையாக பழகியதாலும்  சிறுமி என்பதாலும் யாரும் இளவரசனை கண்டுகொள்ளவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி யாருமில்லாத நேரத்தில், சிறுமி வீட்டுக்கு சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இளவரசன்.

 

இந்த விஷயம் தெரிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இளவரசனிடம் விசாரித்த போலீசார், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், கைகளால் தாக்குவது, பாலியல் பலாத்காரம் ஆகிய நான்கு பிரிவுகளில், வழக்குப் பதிந்து, நேற்று கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பின், ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.