எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது உறவினர் வீட்டுக்கு சென்றேன். அங்கு சுனில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் போனில் பேசிக்கொண்டு வந்தனர். திடீரென  அந்த வாலிபர் என்னுடன் பேசுவதை தவிர்த்தார்.

கள்ளக்காதலுக்காக ஒன்றரை வயது குழந்தையை விஷம் வைத்து கொலை செய்து விட்டு நாடகமாடிய கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். 

கண்ணை மறைத்த கள்ளக்காதல்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கஞ்சி கோவில் விளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (36), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு சஞ்சனா (4) என்ற மகளும், ஒன்றரை வயதில் சரண் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜெகதீஸ் வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது மாலையில் மகன் சரணுக்கு உடல்நிலை சரியில்லை என்று கணவருக்கு போன் மூலமாக தகவல் மனைவி தகவல் தெரிவித்துள்ளார். இதனால், பதறிப்போன கணவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். 

விஷம் கொடுத்து கொலை

அப்போது குழந்தை சரண் மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அதிர்ச்சியளித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மார்த்தாண்டம் காவல்துறையினர், குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஜெகதீஷ் வீட்டில் விஷப்பொடி பாக்கெட்டுகள் கிடந்தது தெரியவந்தது. 

இதையடுத்து கார்த்திகாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மார்த்தாண்ட போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். மேலும், கார்த்திகாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது ஆண் நண்பருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. 

தாய் கைது

போலீசார் கார்த்திகாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியபோது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனது உறவினர் வீட்டுக்கு சென்றேன். அங்கு சுனில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் போனில் பேசிக்கொண்டு வந்தனர். திடீரென அந்த வாலிபர் என்னுடன் பேசுவதை தவிர்த்தார். அவரிடம் இதுபற்றி கேட்டபோது எனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதால் என்னுடன் பழகுவதை தவிர்ப்பதாக கூறினார். இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, கார்த்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.