ஈரோட்டில் செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமி பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் தொடர்ந்து கொலை மற்றும் பலாத்கார சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (74). சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே 8 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தாள். இதனைப்பார்த்த சண்முகம் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தார். 

பின்னர் அவர் தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை பார்க்கும்படி சிறுமியிடம் காட்டியுள்ளார். ஆனால், அந்த சிறுமி பார்க்க மறுத்துள்ளார். பின்னர் சண்முகம் மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றுபலாத்காரம் செய்ததாக கூப்படுகிறது. இதனைத்து, நடந்தவற்றை கூறி சிறுமி ெபற்றோர்களிடம் கதறி அழுதுள்ளார். 

 உடனே பெற்றோர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.