சென்னையில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் பிரபல ரவுடி மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை சோழவரம் அருகே உள்ள காரனோடை சண்முகா நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் ராஜேஷ் என்கிற குள்ள ராஜேஷ் (24). இவர் மீது காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குள்ள ராஜேஷ் நேற்று இரவு வீட்டில் இருந்த வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவு 11.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் தலை, கழுத்தில் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுகாயங்களுடன் ராஜேஷ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இது தொடர்பாக உடனே அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ராஜேஷ் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால், எதிர் தரப்பினர் பழிக்கு பழிக்காக தீர்த்துகட்டினரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.