சென்னை செங்குன்றத்தை அடுத்த விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (28). பிரபல ரவுடி. இவரது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

செங்குன்றம் அருகே பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை செங்குன்றத்தை அடுத்த விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (28). பிரபல ரவுடி. இவரது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. உயிர் பயத்தில் கடந்த சில மாதங்களாக புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், உறவினர் வீட்டில் ரவுடி அஸ்வின் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். 

பின்னர், இருசக்கர வாகனத்தில் ரவுடி அஸ்வின் தனியே வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. இதனால், வண்டியை அங்கேயே போட்டுவிட்டு ஓடினார். ஆனால், அந்த மர்ம கும்பல் விடாமல் அஸ்வினை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவுடி அஸ்வின் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தியதில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேலு (22), வினோத்குமார் (24), சரத்குமார் (20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.