சென்னையில் பயங்கரம்.. திருமணமான 4 மாதங்களில் பிரபல ரவுடியின் தலையில் கல்லை போட்டு கொன்ற புள்ளிங்கோ.!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(25). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சண்முகம் தனது கூட்டாளிகளுடன் அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்றுள்ளார்.
சென்னையில் பிரபல ரவுடி தலையில் கல்லை போட்டுக் கொடூரமாக துடிதுடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் சண்முகம்(25). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சண்முகம் தனது கூட்டாளிகளுடன் அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு சக்திவேல் (23), கரிமுல்லா (19) உள்ளிட்ட 7 பேர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- நாயை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்.. பூங்காவில் வைத்து பலாத்காரம்.. வெளியான வீடியோ..!
அவர்களிடம் ரவுடி சண்முகம் தரப்பினர். கதத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சக்திவேல் தரப்பிடம் ரவுடி சண்முகம் மட்டும் சிக்கிக்கொண்டார். மற்றவர்கள் அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனியாக சிக்கிக்கொண்ட ரவுடி சண்முகத்தின் சரமாரியாக தாக்கி தலையில் சக்திவேல் மற்றும் கூட்டாளிகள் கல்லை தூக்கிப் போட்டு துடிக்க துடிக்க கொலை செய்தனர்.
இதையும் படிங்க;- தாலி கட்டிய புருஷனை விட்டுட்டு கள்ளக்காதலனுடன் போறேன்னு சொன்ன மகள்! ஆத்திரத்தில் தந்தை என்ன செய்தார் தெரியுமா?
இதனையடுத்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சண்முகத்துக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துது முடிந்தது குறிப்பிடத்தக்கது.