சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர்  வல்லரசு. பிரபல ரவுடியான இவர் மீது பல கொள்ளை , கொலை வழக்குள் உள்ளன. தலைமறைவாக இருந்த இவரை போலீசார் சில நாட்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில் வல்லரசு மாதவரம் பேருந்து நிலையம் அருகே சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை ஒன்று வல்லரசுவை கைது செய்ய சென்றது.

போலீசார் வருவதை அறிந்த வல்லரசு அங்கிருந்து தப்ப முயன்றார். வேகமாக தப்பி ஓடிய அவனை பவுன்ராஜ் என்ற போலீஸ் துரத்திச் சென்றார். சென்னை வியாசர்பாடி மேம்பாலம் அருகே அவனை பிடிக்க முயன்றபோது அவர் பவுன்ராஜை கடுமையான அரிவாளால் தாக்கினார்.

இதையடுத்து ரவுடி வல்லரசுவை போலீசார்  என்கவுண்டரில்  சுட்டுக் கொன்றனர். வல்லரசு மீது ஏராளமான கொலை , கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.  வல்லரசு தாக்கியதில், பவுன்ராஜ் உள்ளிட்ட இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.

பவுன்ராஜுக்கு 28 தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து காயமடைந்த போலீசார் இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.