மெரினாவில் பெண் அடித்து கொல்லப்பட்ட விவகாரம்... கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்...!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 8, Nov 2018, 11:29 AM IST
chennai beach woman murder case...2 people arrest
Highlights

சென்னை மெரினா கடற்கரையில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு, விடுமுறை நாட்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதில், சுற்றுலா பயணிகளும் அடங்கும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினா கடற்கரையில் நடத்தப்பட்டது. அதன்பின்னர், மெரினாவில் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. கூட்டமாக யாரும் செல்ல கூடாது என்றும், இரவு நேரங்களில் அங்கு தங்க கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மெரினா கடற்கரை நீச்சல் குளம் பின்புறம் உள்ள மணல் பரப்பில் கடந்த வாரம் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் ரத்து காயங்களுடன் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த அண்ணா சதுக்கம் போலீசார் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் சம்பவ இடத்தில் கைப்பற்றிய செல்போனை வைத்து விசாரணையை தொடங்கினர். 

அப்போது செல்போனில் கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்தனர். அதில், சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம்குமாருடன் செல்வி பேசியது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோ டிரைவர் பிரேம்குமார் மற்றும் அவருடைய  நண்பரை போலீசார் பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. 

அப்போது போலீசாரிடம் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில் பாலியல் தொழில் போட்டியால் கொலை நடைபெற்றதாக கூறியுள்ளனர். மதுரையை சேர்ந்த செல்வி என்பவர் அடிக்கடி மெரினா கடற்கரை பகுதியில் பாலியல் தொழிலில் செய்ய வருவது வழக்கம். மதுரையில் இருந்து சென்னைக்கு வரும்போது எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் செல்வியுடன் வந்த வேறு ஒரு பெண்ணுடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. 

அவளுடன் நெருங்கி பழகியபோது செல்வியால் தனது தொழில் பாதிக்கப்படுவதாக மற்றொரு பெண் புலம்பியுள்ளார். இதனையடுத்து கடந்த வாரம் இரவு மெரினா கடற்கரைக்கு வந்த செல்வி மற்றும் நாங்கள் அனைவரும் நீச்சல்குளம் அருகே மணல் பரப்பில் உட்கார்ந்து மது அருந்திய பிறகு உல்லாசமாக இருந்தோம். அப்போது செல்வி தன்னுடன் ஏன் பேசுவது இல்லை என்று கூறி தகராறு செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பாட்டிலால் தலையில் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  இதையடுத்து, என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த போது வேறுவழியின்றி மணல் பரப்பில் குழிதோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டோம். பதற்றத்தில் சிறியதாக குழி தோண்டி புதைத்ததால் மாட்டிக்கொண்டோம். செல்வியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதை வைத்து போலீசார் எங்களை கையும் களவுகமாக கைது செய்தனர்.

loader