தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை அதே நிறுவனத்தில் பணியாற்றும் லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியைச் சேர்ந்த கணேஷ் (26) என்பவர் கடந்த 9 மாதமாக காதலித்து வந்ததும், சம்பவம் நடைபெற்ற சில தினங்களுக்கு முன்பு அவரை திருமண ஆசை வார்த்தை கூறி பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதும் அம்பலமானது.

புதுவையில் காதலியை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டு அடுத்த சில நாளில் வேறு பெண்ணை மணமுடித்த புதுமாப்பிள்ளையை திருமணமான 3 நாளில் லாஸ் பேட்டை போலீசார் அதி டியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

புதுச்சேரியை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் சில தினங்களுக்கு முன்பு வீட்டில் எலிமருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தையிடம் புகாரை பெற்ற லாஸ்பேட்டை போலீசார் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை அதே நிறுவனத்தில் பணியாற்றும் லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியைச் சேர்ந்த கணேஷ் (26) என்பவர் கடந்த 9 மாதமாக காதலித்து வந்ததும், சம்பவம் நடைபெற்ற சில தினங்களுக்கு முன்பு அவரை திருமண ஆசை வார்த்தை கூறி பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதும் அம்பலமானது.

மேலும் கடந்த 15ம் தேதி அந்த வாலிபர் கடலூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த வேறு பெண்ணை திருமணம் செய்ததை அறிந்த இளம்பெண் தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், தற்கொலை முயற்சி வழக்கினை நம்பிக்கை மோசடி, பலாத்காரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்தனர். பின்னர் புதுமாப்பிள்ளை கணேசை அவரது வீட்டின் அருகே கைது செய்த லாஸ்பேட்டை போலீசார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.