அதிகாலையில் ஆட்டோவில் வந்த 2 இளம்பெண்களை விடிய விடிய மிரட்டியே திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும் கற்பழித்துள்ளார், பாவம் அந்த பொண்ணுங்க, ஊருக்கு போக கூட காசு இல்லாமல் தவித்ததாக திருநாவுக்கரசு பண்ணை வீட்டு பகுதி மக்கள் சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். 

கடந்த 7 ஆண்டுகளாக  கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் இல்லத்தரசிகள் என டார்கெட் பண்ணி சுமார் 300 க்கும் மேற்பட்ட பெண்களை நாசம் செய்து, வீடியோ எடுத்து வந்துள்ளது. திருநாவுக்கரசு உள்ளிட்ட 20 பேர் கொண்ட நண்பர்கள் கும்பல் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, பொள்ளாச்சி போலீசார் விசாரணையும் நடத்தி வந்தனர். 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்காசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அதாவது ஆனைமலை சாலையை அடுத்த சின்னப்பம்பாளையம் பகுதியிலுள்ள சிபிஐ தோட்டத்து வீட்டில் கருணாநிதி தலைமையிலான 4 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த பண்ணை வீடானது ஆனைமலையில் இருந்து 14வது கிலோ மீட்டரில் சின்னப்பம்பாளையம் பகுதியில் உள்ளது. 

இந்த பண்ணை வீட்டின் அருகில், சுற்றிலும் வீடுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தான் இருக்கும். இங்கு விவசாயம் மற்றும் பொள்ளாச்சியில் வேலைக்கு செல்வதால் காலையில் வீட்டை விட்டு போகும் அந்த பகுதி மக்கள் இரவில் தான் வீடு திரும்புவார்கள். தொலைக்காட்சிகளில் இந்த சம்பவம் பற்றிய செய்தி பரவியது அந்த பகுதி மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இந்த பகுதியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், திருநாவுக்கரசு பண்ணை வீடு வித்தியாசமாக உள்ள அந்த, வீட்டின் உள்ளே ஸ்பீக்கர் பெட்டிகள் சத்தம் வெளியே கேட்க முடியாத அளவுக்கு ஜன்னல்களில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு மிக பாதுகாப்பாக இருக்கிறதாம். 

அதேபோல, இந்த விவகாரத்தில் வெளியான ஒரு பெண்ணின் வீடியோ திருநாவுக்கரசு வீட்டில் பதிவு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. நடுராத்திரி திருநாவுக்கரசு நண்பர்களுடன் பைக்குகளில் பண்ணை வீட்டுக்கு வருவதையும், வீட்டில் பாட்டு சத்தம் கேட்பது குறித்தும் அந்த பகுதியினர் பலமஜுரை போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு  ஒரு நாள் அதிகாலை நேரத்தில் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு 2 இளம்பெண்கள் ஆட்டோவில் வந்தார்கள். திருநாவுக்கரசும், அவரது நண்பர்களும் இரவு முழுவதும் மிரட்டி மிரட்டி தங்களை அனுபவித்ததாகவும், தங்களிடமிருந்த பணம், ஏடிஎம் கார்டுகளை பறித்து கொண்டதாக என்றும் எங்களிடம் அழுதார்கள். வெளியூரிலிருந்து வந்து இங்கு படிக்க வந்த இந்த பெண்களை சீரழித்துள்ளனர், அந்த பெண்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்லகூட தங்களிடம் காசு இல்லை என்று எங்களிடம் கண்ணீர்விட்டு சொல்லவும், அந்த பெண்களுக்கு 400 ரூபாய் கொடுத்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தோம் என பல தகவல்களை கூறியுள்ளனர்.