நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த நொச்சிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பண்ணையில் பணிபுரிய சத்தீஸ்கரை சேர்ந்த ஒருவர் மூலம் அதே மாநிலத்தைச் சேர்ந்த சோமனுபோயன் (17), அவரது காதலி போதிமாண்டவி (16) ஆகிய இருவரும் வேலை கேட்டு வந்துள்ளனர்.

வேலைக்கு வந்த இடத்தில் வேறு பெண்ணுடன் பேசியதை கண்டித்த காதலியை கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த நொச்சிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பண்ணையில் பணிபுரிய சத்தீஸ்கரை சேர்ந்த ஒருவர் மூலம் அதே மாநிலத்தைச் சேர்ந்த சோமனுபோயன் (17), அவரது காதலி போதிமாண்டவி (16) ஆகிய இருவரும் வேலை கேட்டு வந்துள்ளனர்.

இருவரையும் விசாரித்த பண்ணை உரிமையாளர் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிப்பதில்லை என்று கூறி இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளார். இச்சூழலில் இருவரும் பண்ணையில் உள்ள நண்பருடன் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், சோமனுபோயன் தனது செல்போனில் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்.இதனை கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த சோமனுபோயன், தனது காதலி போதிமாண்டவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த மோகனூர் காவல் துறையினர் சோமனுபோயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.