நானும் அந்த பெண் போலீஸ் கவிதாவும் பல இடங்களுக்கு சென்று தனிமையில் உல்லாசமா இருந்தோம், அது இப்போ என்னோட ஆபீஸ்ல இருந்த சிசிடிவி கேமராவில் ரெக்கார்ட் ஆயிடுச்சி அதை வைத்து இப்போ மெரட்டுரா காசு கேட்கிறாள் என தொழிலதிபர் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து அந்தரங்க மேட்டரை போலீஸ் புகாரில் அப்படியே சொல்லி அழுதுள்ளார்.

கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார். இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வாங்கிக்கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் கருமத்தம்பட்டி போலீசில் பணிபுரிந்த கவிதா என்ற பெண் போலீசுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த சிசிடிவி காட்சிகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. 

இந்த பெண் போலீஸ் கவிதாவும் கல்யாணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சிசிடிவி காட்சிகள் வெளியானது பற்றி கோவை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ள போவதாக அதிகாரிகளிடம் கூறினார். இதனையடுத்து காவலர் கவிதா ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட  நிலையில் சிசிடிவி விவகாரம் அப்படியே முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரை நேரில் அவரது அலுவலகத்தில் சந்தித்து புகார் அளித்தார். அப்போது, தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மைதிலி என்பவர் மூலம் கவிதா என்ற பெண் போலீஸ் அறிமுகம் கிடைத்ததாகவும், அதன் பின் பெண் போலீசுடன் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்து வந்ததாகவும், தனது அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவான காட்சிகள் வெளியானதாகவும் தெரிவித்த அவர், இந்த வீடியோ பதிவுகளைக் காட்டி கவிதாவும், மைதிலியும் தன்னிடம் மிரட்டி பணம் பறித்து வருவதாகவும், இதுவரை அந்த வீடியோவை காட்டி மிரட்டிய அவர்கள் ரூ.3 லட்சம் பறித்து விட்டனர்.

இன்னும் 3 வீடியோ இருப்பதாகவும் அதனை வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார்கள். தற்போது அந்த பெண் போலீஸ் கோவை ஆயுதப்படையிலும், அவரது தோழி சென்னையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.   அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார்.