மத்திய பிரதேச மாநிலத்தில் ஆண் குழந்தை  பிறந்தநாள் ஆடு மேய்க்கும் சிறுவனை பலி கொடுத்து தம்பதியர் நேர்த்திக் கடன் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைதுசெய்துள்ளனர். போலி சாமியார் கூறியதன் அடிப்படையில் அவர்கள் இந்த கொடூரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆண் குழந்தை பிறந்தநாள் ஆடு மேய்க்கும் சிறுவனை பலி கொடுத்து தம்பதியர் நேர்த்திக் கடன் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைதுசெய்துள்ளனர். போலி சாமியார் கூறியதன் அடிப்படையில் அவர்கள் இந்த கொடூரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முழு விவரம் பின்வருமாறு:- மத்தியபிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் க்யோடிகியை சேர்ந்தவர் ராம்லால், இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவரது மனைவி நான்காவதாக கர்ப்பமானார், இந்த முறை நிச்சயம் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டார், அதுமட்டுமின்றி ஆண் குழந்தை பிறக்க வில்லை என்றால் விவாகரத்து செய்து விடுவேன் என்று மனைவியை மிரட்டி வந்துள்ளார், இந்நிலையில் உள்ளூரில் உள்ள மந்திரவாதி ஒருவரை சந்தித்த அவர்கள், தங்களது எதிர்பார்ப்பை கூறியுள்ளனர்.

இதனை அடுத்து அந்த மந்திரவாதி அவர்களுக்கு சில பூஜைகளை செய்ததுடன், ஒரு ஆண் பாலகன் ஒருவரை உள்ளூர் கோவிலில் நரபலி கொடுத்தால் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என கூறியதாக தெரிகிறது. அப்படியே செய்வதாக கூறி அவர்கள் வீட்டுக்கு வந்து விட்டனர், இந்நிலையில் ராம் லாலுக்கு எதிர்பார்த்தபடியே கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது, உடனே மகிழ்ச்சியில் திளைத்த அவர்கள் மந்திரவாதி சொன்னபடி நேர்த்திக் கடனை நிறைவேற்ற திட்டமிட்டார், இந்நிலையில் கியோட்டி கிராமத்தில் தனிமையில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனை அவர்கள் பலிகொடுக்க முடிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்: வீடியோ காலில் வந்த நிர்வாண பெண்.. இதெல்லாம் பொழப்பா ? இளைஞர் செய்த அந்த காரியம்

அதேபோல அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த திவ்யான்ஸ் என்ற அந்த சிறுவனை சாமி கும்பிடலாம்வா என ஏமாற்றி கோவிலுக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் அச்சிறுவனை அங்கிருந்த கத்தியால் ராம் லாலின் மனைவி மாயா வெட்டிக்கொலை படுகொலை செய்தார். இச்சம்பவம் ஜூலை 6ஆம் தேதி நடந்தது, பின்னர் உடலை அவர்கள் அங்கிருந்து மறுத்துவிட்டனர், இதையடுத்து சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடினார், பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது,

இதையும் படியுங்கள்:  திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பெண்ணிடம் சில்மிஷம்… மதம்மாற சொல்லி வற்புறுத்தல்… அடுத்து நடந்தது என்ன?

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவனை ராம் லால் - மாயா தம்பதியர் நரபலி கொடுத்தது தெரியவந்தது. இந்நிலையில் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.