கடந்த 19ம் தேதி, கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோயில் முதல் தெருவில் உள்ள ராதாவின் நண்பரான புஷ்பா (49) வீட்டுக்கு பேராசிரியரை வரவழைத்துள்ளார். அங்கு பேராசிரியர் சென்றதும், குளிர்பானம் கொடுத்துள்ளனர். 

சென்னையில் பேராசிரியருக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பேராசிரியர்

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த 59 வயதான நபர் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவனதத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு வசித்து வந்த ஆர்த்தி என்பவர் மூலம் ராதா (40) என்பவர் பேராசிரியருக்கு அறிமுகமாகியுள்ளார். இதன்பிறகு ராதா, தொழில் தொடங்கப்போவதாக கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிறுக சிறுக நான்கரை லட்சம் ரூபாய் வரைக்கும் பணம் பெற்றுள்ளார். கொடுத்த பணத்தை திரும்பக்கேட்டபோது ராதா சரிவர பதில் கூறாமல் இழுத்தடிப்பு செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு

ஆனால், நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி தராததால், கடந்த 2019ம் ஆண்டு ராதா மீது பேராசிரியர் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆனால், வழக்கு விசாரணைக்கு முறையாக ராதா ஆஜராகாததால் சமீபத்தில் ராதாவுக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராதா, பேராசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்து கொள்ளலாம் என்றும் கூறி புஷ்பா என்பவரின் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். 

ஆபாச படம்

அதன்படி, கடந்த 19ம் தேதி, கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோயில் முதல் தெருவில் உள்ள ராதாவின் நண்பரான புஷ்பா (49) வீட்டுக்கு பேராசிரியரை வரவழைத்துள்ளார். அங்கு பேராசிரியர் சென்றதும், குளிர்பானம் கொடுத்துள்ளனர். அதை குடித்த அவர், சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார். உடனே, பேராசிரியரின் ஆடைகளை கழற்றிவிட்டு, அங்கு ஏற்கனவே தயாராக இருந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (30) என்பவருடன் ஆடையில்லாமல் ஒன்றாக இருப்பது போன்று செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கு லட்சுமியின் கணவர் முருகனும் (40) உடந்தையாக இருந்துள்ளார். 

3 பெண்கள் கைது

அரை நிர்வாண கோலத்தில் மயக்கம் தெளிந்தவரிடம் பணத்தை கேட்டால் வீடியோ வெளியிடப்படும். பணப்பிரச்னை தொடர்பாக நீ என் மீது நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை உடனே திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அந்த ஆபாச வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர் இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கோயம்பேடு ரயில் நகர் பகுதியை சேர்ந்த ராதா, லட்சுமி, அவரது கணவர் முருகன், புஷ்பா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை பறிமுதல் செய்தனர்.