அந்த பெண்ணை விட்று.. அவள் உனக்கு தங்கச்சிடா .. காதல் ஜோடியை பிரிக்க பாஜக Ex MLA, ஊர் பெரியவர்கள் டார்ச்சர்
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அண்ணன் தங்கை உறவு முறையில் வருவதாகக் கூறி தம்பதியரை பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய பஞ்சாயத்து பிரித்து வைக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது.
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அண்ணன் தங்கை உறவு முறையில் வருவதாகக் கூறி தம்பதியரை பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய பஞ்சாயத்து பிரித்து வைக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது.
நம் நாடு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ந்திருந்தாலும், மறுபுறம் மூடநம்பிக்கை, சாதிய ஏற்றத்தாழ்வு, காதலுக்கு எதிரான மனநிலை போன்ற கொடுஞ்செயல்கள் சமூகத்தில் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியர் இருவரும் ஒரே கோத்திரத்தில் வருவதாக கூறி. அவர்களை ஒட்டு மொத்த கிராமமே சேர்ந்து பிரிக்க முயன்று வரும் சம்பவம் நடந்துள்ளது. முழுவிவரம் பின்வருமாறு:-
இதையும் படியுங்கள்: மகனை டைவர்ஸ் செய்ய திட்டமிட்ட மருமகள்.. மாமனார் போட்ட ஸ்கெட்சில் மாட்டிய அப்பாவி மருமகள் !
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் சிவம் என்ற வாலிபர் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த தனு என்ற இளம்பெண்ணும் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு உருவானது, அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் வீட்டுக்கு தெரிந்தால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என அஞ்சிய காதல் ஜோடி குடும்பத்துக்குத் தெரியாமல் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் செப்டம்பர் 12ஆம் தேதி சரிதானா தாலுக்காவில் தங்களது திருமணத்தை பதிவு செய்தனர். அப்போது அவர்களின் ரகசிய திருமணம் வெளியில் தெரிந்தது.
இதையும் படியுங்கள்: கணவன் இல்லாத நேரத்தில் இன்ஸ்பெக்டருடன் பெண் போலீஸ் உல்லாசம்.. ஒளிந்திருந்து பிடித்த போலீஸ் கணவன்.
இந்நிலையில் இருவரும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அதாவது, இருவரும் உறவு முறையில் அண்ணன் தங்கை முறையாகிறார்கள் எனக்கூறிய கிராம பெரியவர்கள் அவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டால் அது கிராமத்திற்கு நல்லது அல்ல, அது கிராமத்திற்கு அபசகுணம் ஆகும், எனவே அந்த இளம்பெண்ணை ஐந்து நாட்களுக்குள் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் இருவரையும் ஊரை விட்டு விரட்டி விடுவோம் என கிராம பஞ்சாயத்து பெரியவர்கள் மிரட்டி வந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சங்கீத் சோமும் கலந்து கொண்டார். அவர் அடங்கிய பஞ்சாயத்தே இந்த தீர்ப்பை வழங்கியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அக்கிராமத்தில் வசிக்கும் ஒருவர், சமூக நெறிமுறைகளை மீறும் இந்த செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற திருமணங்களை நாங்கள் ஒருபோதும் ஏற்பதில்லை, இது எங்களது மரபுக்கு எதிரானது. அண்ணன் தங்கை முறையில் இருப்பவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டால் இன்னும் சிலர் அதை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினார்.
இந்நிலையில், கிராம பஞ்சாயத்தால் கலக்கமடைந்த அத்தம்பதியர் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாரை அணுகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.