அடுத்த மாதம் திருமணம்..பத்திரிக்கை எல்லாமே ரெடி.! பெண் அதிகாரி ‘திடீர்’ தற்கொலை - ஷாக் !!

அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Betrothed girl commits sudden suicide at chennai

சென்னை, சேலையூர் அடுத்த சந்தோஷபுரம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெயந்தி, மகன் நவீன். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

தனியார் கல்லூரியில் நவீன் படித்து வருகிறார். ஜெயந்திக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்ததால், அவரது பெற்றோர் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக நேற்று முன்தினம் சென்றுள்ளனர். நவீன் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது, ஜெயந்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Betrothed girl commits sudden suicide at chennai

இதையும் படிங்க..தரக்குறைவான வார்த்தையை உச்சரித்த பிரபல நடிகர்.. அஜித் குமாரை கண்டிக்கும் தமிழக பாஜக - சர்ச்சையில் துணிவு!

கல்லூரிக்கு சென்ற நவீன், இரவு  வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் வெளியே கிரில் கேட் மூடப்பட்டிருந்தது. இதனால், வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து, உள்ளே சென்று பார்த்தார். அப்போது, சகோதரி ஜெயந்தி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  பிறகு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஜெயந்தி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Betrothed girl commits sudden suicide at chennai

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஜெயந்தி சில வருடங்களுக்கு முன்பு, சைதாப்பேட்டையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடம் வாங்குவதற்காக வங்கி மூலம் ₹31 லட்சம் லோன் வாங்கி கட்டி வந்தது தெரிய வந்தது.  வரப்போகிற மார்ச் மாதம் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடன் அதிகமாக இருந்ததால் மன அழுத்தத்தில் இறந்தாரா ? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க..85 ஆண்டுகளாக நடந்து வரும் சமய மாநாட்டுக்கு தடையா.? இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக பொங்கிய அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios