ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜஹீர் பாஷா தனது மனைவியை அருகில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். நிலை தடுமாறி கீழே விழுந்த மனைவி அதே இடத்தில் உயிரிழந்தார்.

பெங்களூரில் வசித்து வரும் 40-வயதான நபர், தனது மனைவி ஆபாச படத்தில் நடித்ததாக சந்தேகப்பட்டு அவரை கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆட்டோ டிரைவராக பணியாற்றி வரும் ஜஹீர் பாஷா அடிக்கடி ஆபாச படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக கொண்டவர் ஆவார். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இவர் ஆபாச படத்தை பார்த்து இருக்கிறார். அந்த ஆபாச படத்தை பார்த்தில் இருந்து, தனது மனைவி அதில் நடித்து இருப்பதாக நினைத்து கொண்டுள்ளார். இதை அடுத்து மனைவி ஆபாச பட நடிகை என கூறி, அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

கொலை:

இந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கியது. வழக்கம் போல் மீண்டும் மனைவியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜஹீர் பாஷா தனது மனைவியை அருகில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதை அடுத்து நிலை தடுமாறி கீழே விழுந்த மனைவி அதே இடத்தில் இரத்த வெளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஜஹீர் குழந்தைகளின் முன்பே நடந்து இருக்கிறது.

"ஞாயிற்று கிழமை 12.40 மணி அளவில் இந்த தம்பதியின் முதல் மகன் அவர்களது வீட்டின் அருகில் உள்ள தனது தாத்தா கௌஸ் பாஷா வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி இருக்கிறான். இதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு கௌஸ் பாஷா மகள் வீட்டிற்கு விரைந்து சென்று இருக்கிறார். வீட்டில் தனது மகள் சடலமாக கிடந்ததை பார்த்து கௌஸ் பாஷா அதிர்ச்சி அடைந்தார்," என போலீஸ் அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். 

மருத்துவமனையில் அனுமதி: 

பெங்களூரை சேர்ந்த பாஷா மற்றும் முனீபா தம்பதியிர், திருமணம் முடித்து 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஷா தனது மனைவியை குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் தாக்கினார். இதை அடுத்து பாஷா ஏன் இவ்வாறு செய்தார் என்ற காரணத்தை குடும்பத்தார் அறிந்து கொண்டனர். 20 நாட்களுக்கு முன்பு பாஷா கடுமையாக தாக்கியதில், மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.