காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியுடன் துணி துவைக்க சென்றபோது ஒரு தலைகாதலனால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தோழியுடன் துணி துவைக்க சென்றபோது ஒரு தலைகாதலனால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆறு மாத குழந்தை முதல் 90 வயது கிழவி வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழிப்பு, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து கொடுமை செய்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வரிசையில் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஒரு தலைகாதலனால் இளம் பெண்ணுக்கு கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குண்டூர் மாவட்டம் அச்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது பெற்றோர்களுடன் நெரேடுசார்வில் வசித்து வருகிறார், அந்தப் பெண்ணின் தந்தை ஆயுர்வேத மருந்து விற்பனையாளராக இருந்து வருகிறார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள அந்தப் பெண், குண்டூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், அங்கிருந்து அவ்வப்போது தனது பெற்றோர்களை சந்தித்து வந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தனது பெற்றோர்களை சந்திக்க வந்தபோது, உள்ளூர் வாலிபரான பதுலா பால சயீத் (23) என்ற இளைஞன் அந்தப் பெண்ணை காதலிப்பதாக கூறி பின்தொடர்ந்தார். ஆனால் அந்த பெண் அதை ஏற்க மறுத்தார், ஆனாலும் அந்த இளைஞன் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

தனக்கு வேறொரு ஆணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதாகவும், அந்தப் பெண் கூறியும் அந்த இளைஞன் அந்த பெண்ணை விடுவதாக இல்லை, இந்நிலையில் அந்தப் பெண்ணை அவரது மாமாவின் மகனுக்கு திருமணம் செய்யும் முடிவில் உறவினர்கள் கடந்த புதன்கிழமை அந்தப் பெண் வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் அந்தப் பெண் தனது தோழியுடன் துணி துவைக்க அருகிலுள்ள கால்வாய்க்கு சென்றார் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளதை தெரிந்துகொண்ட ஒருதலை காதலன் பால சையித் அந்தப் பெண்ணிடம் மீண்டும் தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தினான், ஆனால் அந்த பெண் அதை ஏற்கவில்லை, இதனால் தன் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் அந்தப் பெண்ணின் கழுத்தை இந்த இளைஞர் கரகரவென அறுத்தார்.

இதைகண்ட உடன் இருந்த தோழி அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த இளைஞன் அங்கிருந்து தப்பினார், இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பொதுமக்கள் அந்த பெண்ணை மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஹீசூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பெண் ஆபத்தான் கட்டத்தை தாண்டி விட்டதாகவும், தொடர்ந்து தலைமாறைவாக உள்ள அந்த இளைஞரை தேடி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.