பெண் மருத்துவரை கற்பழித்து கொலை செய்த வழக்கில்  என்கவுண்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரில் அதிர்ச்சி தரும்  வாக்குமூலங்கள் தற்போது வெளியாகியுள்ளது . பெண் மருத்துவரை கற்பழித்து கொன்றதற்கு  முன்னர் சுமார்  ஒன்பதுக்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது .   ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்காவை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்ன கேசவலு நவீன் மற்றும் அவரது நண்பர்கள் என நான்கு பேர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து பின்னர் கழுத்தை நெரித்துக் கொண்டதுடன் ஒரு பாலத்தின் கீழ் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கினார். இச்சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பின்னர் இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் டோல்கேட்டில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக வைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட அகமது பாஷா,  நவீன் ,  சின்ன கேசவலு,  மற்றும் சிவா ஆகிய 4 பேரை கைது செய்தனர் .  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 6 தேதி அதிகாலை 3 மணி அளவில் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் .  அவர்கள் தப்ப முயற்சி செய்தபோது சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர் .  இந்நிலையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் பின்னணி குறித்து உயர்மட்ட பொலிஸ் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது அதில் தெலுங்கானா கர்நாடக எல்லைப் பகுதியில் அவர்களுக்கு தொடர்பு இருந்ததாக  தெரிவித்துள்ளது .  மேலும் அவர்கள் இதே பகுதியில் சுமார் 15 பேரை எரித்து கொன்று  இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

இந்நிலையில் அந்த 4 பேரும் இறப்பதற்கு முன்னர் போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளனர் .  அதாவது ஏற்கனவே இதேபோல் பாலியல் தொழிலாளர்கள்,  திருநங்கைகள் மற்றும் தனியாக தங்களிடம் சிக்கிய பெண்கள் என 9 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொன்றுள்ளோம் என  போலீசிடம் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.   இத்தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு பிரிவு, மற்றும்  ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிர்புர்கர் தஙைமையிலான ஆணையமும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.