ஸ்டார் ஹோட்டலில் தன்னை உள்ளே விட மறுக்கப்பட்டதால் பெண் அழகுக் கலை நிபுணர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து பரபரப்பாக மாறியது.

சென்னை தண்டையார்பேட்டையில் பியூட்டி பார்லர் நடத்திவரும் பெண், சென்னை சாலையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலுக்கு வருவது வழக்கம்,  கடந்த இலை தினங்களுக்கு முன்பு வந்த இவர் அளவுக்கு அதிகமாக மப்பில் இருந்த அந்த பெண் செய்த கலாட்டாவை அறிந்து வந்த போலீசார் சமாதானப் படுத்த முயன்றனர். ஆனால், அந்தப் பெண்ணோ, தன்னை ஹோட்டலுக்குள் அனுமதிக்கச் சொல்லுமாறு மீண்டும் காவல்துறையினரை வற்புறுத்திக் கொண்டிருந்த நிலையில் போலீசார் வேறு வழியின்றி அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இந்நிலையில், போலீசாரை அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், கடந்த 4-ஆம் தேதி நடந்த ஒரு பார்ட்டியில் தன்னை ஒருவர் நடனமாட அழைத்ததாகவும் தான் மறுத்ததால் அவர் தன்னை தாக்கியதாகவும் அந்த பெண் புகார் அளித்ததாக போலீசார் கூறினார். சிசிடிவி. காட்சிகளின் அடிப்படையில் அவர் உதவி இயக்குநர் என தெரிய வந்ததாகவும் கூறிய போலீசார் எனினும் இயக்குநர் முன் ஜாமீன் பெற்று விட்டதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர். 

இந்நிலையில் அந்தப் பெண்ணால் அந்த ஸ்டார் ஹோட்டலில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதால், அந்தப் பெண்ணை ஹோட்டலில் அனுமதிப்பதில்லை என விடுதி நிர்வாகம் முடிவெடுத்து செயல்படுத்திய நிலையில் அந்தப் பெண் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது.