பைக் டாக்ஸி ஓட்டுநரின் போனை பிடுங்கி உடைத்த ஆட்டோ டிரைவர்!
பைக் டாக்ஸி ஓட்டுநரை வழிமறித்து அவர் வைத்திருந்த போன், ஹெல்மெட் ஆகியவற்றை பிடுங்கி எறிந்து உடைத்த ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பைக் டாக்ஸி ஓட்டுநரை ஆட்டோ டிரைவர் வழிமறித்து அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பெங்களூரு போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வீடியோவில் ஆட்டோ டிரைவர் பைக் டாக்சி ஓட்டுநரை தாக்க முயல்வதையும், அவர் வைத்திருந்த மொபைல் போனையும் கூடுதல் ஹெல்மெட்டையும் கீழே போட்டு உடைப்பதையும் காணலாம்.
வடக்கு கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ரேபிடோ பைக் டிரைவர் ஆட்டோ டிரைவரின் அராஜகத்தால் மிரண்டு போய் இருக்கிறார். அந்த ஆட்டோ டிரைவர், "நீங்கள் எல்லாம் வேறு இடத்தில் இருந்து இங்கே வந்து வேலை செய்கிறீர்கள்... உங்களால் ஆட்டோ ஓட்டுநர்களுக்குதான் நஷ்டம். எல்லாரும் பாருங்கள். இவர் வேறு ஏதோ நாட்டில் இருந்து இங்கு வந்து மகிழ்ச்சியாக பைக் டாக்சி ஓட்டிக்கொண்டிருக்கிறார். இது ஆட்டோ துறை எந்த அளவுக்குக் கெட்டுப் போயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது." என்று சொல்கிறார்.
திருமண விழாவில் நடனமாடிய பெண் மீது பணத்தை வீசி எறியும் காங்கிரஸ் தொண்டர்
மேலும், "இந்தப் பையன் சட்டவிரோதமாக ஓட்டும் பைக் டாக்சியில் ஒரு பெண்ணை இறக்கிவிட்டான். அவர் நம் நாட்டைச் சேர்ந்தவரே அல்ல. அவர் வெளிநாட்டவர்” என்றும் அந்த ஆட்டோ டிரைவர் கூறுவதை வீடியோவில் காணமுடியும்.
பைக் டாக்சி ஓட்டிய இளைஞர் கல்லூரி மாணவர் என்றும் தன் டியூஷன் செலவுக்காக பகுதி நேரமாக இந்த வேலை செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. திங்கள்கிழமை பெங்களூரு இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்தச் சம்பவம் நடந்தது. இதனை அந்தப் பகுதியில் இருந்தவர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெங்களூரு காவல்துறை உறுதி அளித்துள்ளது. ஆட்டோ டிரைவர் மீது பைக் ஓட்டிவந்தவர் தரப்பில் புகார் கொடுக்கவில்லை. இருப்பினும், போலீசார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் காதலி மிரட்டியதால் நடுரோட்டில் மனைவியிடம் இருந்து தப்பி ஓடிய கணவர்!