திருமண விழாவில் நடனமாடிய பெண் மீது பணத்தை வீசி எறியும் காங்கிரஸ் தொண்டர்
திருமண விழாவில் நடனமாடிய பெண் மீது பணத்தைத் தூக்கி எறிந்த காங்கிரஸ் தொண்டர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது.
கர்நாடக காங்கிரஸ் தொண்டர் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும் பெண் மீது ரூபாய் நோட்டுகளை வீசி எறியும் காட்சி வீடியோ பதிவு செய்யப்பட்டு வைரலாகியு்ள்ளது.
அந்த வீடியோவில், ஹூப்ளியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சிவசங்கர் ஹம்பன்னா, அந்தப் பெண்ணின் அருகில் நடனமாடியபடி அவர் மீது பணத்தை வீசிக்கொண்டிருப்பதைக் காணலாம். கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் நடந்த திருமண விழாவின்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக பாஜக பொதுச்செயலாளர் மகேஷ் தெங்கிங்காய், "இது வெட்கக்கேடானது" என்று கூறியுள்ளார். "அந்த வீடியோவை டிவியில் பார்த்தேன். ஒரு பெண் நடனமாடுகிறார். அவர் மீது ரூபாய் நோட்டுகள் வீசப்படுகின்றன. இவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாது. இதுபோன்ற நிகழ்வுகள் காங்கிரஸின் கலாசாரம் என்ன என்பதைக் காட்டுகிறது. அதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். காங்கிரஸ் இதுகுறித்து நடவடிக்கை வேண்டும்” என்று மகேஷ் கூறினார்.
Delhi Building Collapse: டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்! வைரல் வீடியோ!
பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி நாயக்கும் காங்கிரஸை கடுமையாகச் சாடுகிறார். "அந்த பெண்ணுக்கு அவர் என்ன மரியாதை கொடுக்கிறார் என்பதுதான் என் ஒரே கேள்வி. இது காங்கிரஸுக்கு மட்டுமே உள்ள கலாசாரம். திருமண வைபவத்தில் பெண் மீது பணத்தைத் தூக்கி எறியும் கலாச்சாரத்தை காங்கிரஸால் மட்டுமே விளக்க முடியும்." என்று அவர் தெரிவிக்கிறார்.
மேலும், "தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓர் அரசியல் கட்சியின் தலைவர் இப்படி நடந்து கொள்வது முற்றிலும் தவறானது. அந்தக் காங்கிரஸ் தொண்டர் உடனடியாக அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த சம்பவம் முழுக்க முழுக்க பெண்களை அவமரியாதை செய்யும் நிகழ்வு" என்றும் ரவி நாயக் கூறுகிறார்.