Jesus of Tongeren: கென்யாவில் 'நான் தான் இயேசு' என்று அறிவித்த நபர்... சிலுவையில் ஏற்றத் தயாரான மக்கள்!
கென்யாவில் நான்தான் இயேசு என்று அறிவித்துக்கொண்ட நபரை அந்நாட்டு மக்கள் சிலுவையில் ஏற்றப்போவதாக கூறிவருகின்றனர்.
கென்யாவில் தன்னைத் தானே இயேசு கிறிஸ்து என்று கூறிக்கொள்ளும் போலி பாதிரியார் இப்போது தன்னைக் காப்பாற்றுங்கள் என்று அந்நாட்டு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.
கென்யாவின் புங்கோமா மாகாணத்தில் உள்ள டோங்கரேன் பகுதியைச் சேர்ந்தவர் எலியுட் சிமியு. இவர் நான்தான் இயேசு என்று கூறி தனக்குக் கீழ் சீடர்களைத் திரட்டிக்கொண்டு மதப் பிரசாரம் செய்துவருகிறார். லுகோக்வே கிராமத்தில் உள்ளவர்கள் சிலர் அவருடைய சீடர்களாக இருக்கிறார்கள். தன் பெயருக்குப் பதிலாக தன்னை டோங்கரேன் இயேசு என்று அறிவித்துக்கொண்டிருக்கிறார்.
தான்தான் இயேசு என்று சொல்லிவரும் இவரை டோங்கரேன் மக்கள் சிலர் ஈஸ்டர் தினத்தில் சிலுவையில் ஏற்றப் போவதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார். அதேபோல இவரையும் சிலுவையில் அறையவேண்டும், உயிர்த்தெழுகிறாரா என்று பார்க்கலாம் என அவர்கள் கூறுகிறார்கள். இதனை அறிந்ததும் என்னைக் காப்பாற்றுங்கள் என்று காவல் நிலையத்திற்கு ஓடிச்சென்று புகார் கொடுத்திருக்கிறார்.
1981 இல் பிறந்த சிமியுவின் பெற்றோர்களான பிரான்சிஸ் மற்றும் சிசிலியா சிமியு, அவரது குழந்தைப் பருவத்திலேயே காலமானார்கள். சிமியு கத்தோலிக்கராக வளர்ந்தார். 2001ஆம் ஆண்டு 20 வயதில் இவருக்குத் திருமணம் நடந்தது. இவருக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மூத்த மகன் தற்போது கியாம்பு மாகாணத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வருகிறார்.
Li Qiang: விசுவாசமான லி கியாங்கை பிரதமராக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிக்
2009ஆம் ஆண்டில் நடந்த குடும்ப தகராறில் சிமியுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதில் இருந்து மதப் பிரசங்கத்தைத் தொடங்கினார் என்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.
சிமியுவின் மனைவி, தனது கணவர் தண்ணீரை ஏராளமான தேநீராக மாற்றினார் என்றும் அதை கிராம மக்கள் சிலர் ருசித்துப் பார்த்தனர் என்றும் கூறினார். தான் இயேசு என்று தனது கணவர் கூறியதால், கிராமத்தில் தனது குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் அந்தப் பெண் சொல்கிறார்.