Li Qiang: விசுவாசமான லி கியாங்கை பிரதமராக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிக்
சீனாவின் இரண்டாவது அதிகாரம் மிக்க பதவிக்கு அதிபர் ஜின்பிங் விசுவாசியான லி கியாங் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்க்கு நெருக்கமானவரான லி கியாங் அந்நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் பிரதமராக இருந்த லீ காச்சியாங்கின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய பிரதமராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலகிறது. பலரும் அதிபர் ஜின்பிங்குக்கு விசுவாசமானவரான லி கியாங் பிரதமராக வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கின்றனர்.
சீனாவில் பிரீமியர் எனக் குறிப்பிடப்படும் பிரதமர் பதவி பெயர் அளவில் மட்டும் நாட்டை ஆட்சி செய்யும் பதவி ஆகும். முழு அதிகாரமும் அதிபர் ஜின்பிக் வசம்தான் உள்ளது. இருந்தாலும் அந்நாட்டில் அதிபருக்கு அடுத்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்டவர் பிரதமர்.
63 வயதான லி கியாங் சீனாவின் புதிய பிரதமர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. தனக்கு நெருக்கமான லி கியாங்கையே நியமனம் செய்வதன் மூலம் அதிபர் ஜி ஜின்பிங் தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவார் என்று கருதப்படுகிறது.
கொரோனா பரவலின்போது ஷாங்காய் நகரில் லி கியாக் மேற்பார்வையில் லாக்டவுன் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. கியாங் திறமையாக செயல்பட்டு கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்தார் என்றும் அவர் சிறந்த நிர்வாகி என்பதாலேயே பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால் மற்றொரு தரப்பினர் அவர் நிலைமையைச் சரியாகக் கையாளமல் போனதால் உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்பட்டன என்றும் அவரைப்போய் பிரதமர் ஆக்குவதா என்றும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
Female Entrepreneurs in India: தனி வழியில் பயணித்து சாதித்த டாப் 10 இந்தியப் பெண் தொழிலதிபர்கள்!