முன்னாள் காதலி மிரட்டியதால் நடுரோட்டில் மனைவியிடம் இருந்து தப்பி ஓடிய கணவர்!

பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முன்னாள் காதலியின் மிரட்டலுக்கு பயந்து, திருமணத்துக்கு மறுநாளே தன் மனைவியை விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்.

Bengaluru traffic helps groom give bride the slip

பெங்களூரின் மோசமான போக்குவரத்து நெரிசல் ஒரே ஒரு நபருக்கு மட்டும் தன் மனைவியிடம் இருந்து தப்பி ஓடுவதற்கான வரப்பிரசாத வாய்ப்பாக அமைந்துவிட்டது! திருமணம் முடிந்த மறுநாள், பிப்ரவரி 16ஆம் தேதி, அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் மகாதேவபுரா தொழில்நுட்ப வளாகப் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அப்போது இதுதான் சமயம் என்று காரிலிருந்து இறங்கி ஓடிவிட்டார் புது மாப்பிள்ளை.

ஓடிப்போனவரை இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து  தேடியும் எந்தப் பலனும் இல்லாததால், மார்ச் 5ஆம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இப்போது காவல்துறையினரின் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Viral Video: நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ம.பி. போலீஸ்!

சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணியைச் சேர்ந்தவர் விஜய் ஜார்ஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது முன்னாள் காதலி தாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட அந்தரங்கப் படங்களை பகிரங்கமாக வெளியிடுவதாக மிரட்டியதால் மன உளைச்சல் இருந்தார் என்று கூறப்படுகிறது.

Bengaluru traffic helps groom give bride the slip

பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு, ஜார்ஜ் தனது முன்னாள் காதலியால் அச்சுறுத்தப்படுவது பற்றி மனைவியிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது மனைவி, தானும் தன் பெற்றோரும் அவருக்கு உறுதுணையாக நிற்பதாகவும், கவலைப்பட வேண்டியதில்லை எனவும் உறுதி அளித்துள்ளார்.

மறுநாள் இருவரும் காரில் தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்பியக்கொண்டிருந்தனர். அப்போது, போக்குவரத்து நெரிசலால் பை லேஅவுட் அருகே அவர்கள் சென்ற கார் சுமார் 10 நிமிடம் நின்றது. காரின் முன் இருக்கையில் இருந்த ஜார்ஜ் திடீரென காரில் இருந்து வெளியேறி ஓடிப்போய்விட்டார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவியும் காரை விட்டு இறங்கி கணவரைத் துரத்திக்கொண்டு ஓடினார். ஆனால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

சைபர் க்ரைம் குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் விடுவிப்பு

கர்நாடகா மற்றும் கோவாவில் மனிதவள நிறுவனம் ஒன்றை நடத்தும் தந்தைக்கு உதவியாக இருந்துவந்தார் ஜார்ஜ். கோவாவில் இருந்தபோது, அவர்களுடைய நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தவரின் மனைவியுடன் ஜார்ஜுக்கு தொடர்பு வைத்திருந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணும் அதே நிறுவனத்தில் கிளார்க் வேலை பார்த்துவந்தவர்.

ஒருநாள் இந்த விவகாரம் ஜார்ஜின் அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. இதனால் ஜார்ஜ் அந்தப் பெண்ணுடனான உறவை முறித்துக்கொள்வதாக தாயிடம் உறுதி அளித்தார். ஆனால் தொடர்ந்து ரகசியமாக அந்தப் பெண்ணுடன் பழகிவந்துள்ளார். இதனிடையே ஜார்ஜின் குடும்பத்தினர் அவருக்கு வேறு இடத்தில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

"திருமணத்திற்கு முன்பே இந்த விவகாரம் பற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்தப் பெண்ணுடன் உள்ள தொடர்பை விட்டுவிடுவதாக வாக்களித்தார். அதனால் அவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டேன்" என்று ஜார்ஜின் மனைவி கூறுகிறார். "அந்தப் பெண்ணின் பிளாக்மெயிலுக்குப் பயந்துதான் ஜார்ஜ் ஓடிவிட்டார். அவருக்கு தற்கொலை செய்யும் எண்ணமும் இருந்தது போலத் தோன்றுகிறது. அவர் பாதுகாப்பாக இருப்பார் என்றும் விரைவில் என்னிடம் திரும்புவார் என்று நம்புகிறேன்” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இது தற்பெருமையின் உச்சம்! பிரதமர் மோடியை வெளுத்து வாங்கும் காங்கிரஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios