இது தற்பெருமையின் உச்சம்! பிரதமர் மோடியை வெளுத்து வாங்கும் காங்கிரஸ்!

பிரதமர் மோடி தன் பெயர் சூட்டப்பட்ட மைதானத்தில் வைத்து தன் உருவப் படத்தையே பரிசாகப் பெற்றுள்ளார். இதை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Gifted Narendra Modi's Photo To Narendra Modi At Narendra Modi Stadium: Congress Taunts PM

அகமதாபாத்தில் உள்ள மோடேராவில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன், பிரதமர் மோடி மற்றும் அவரது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் கோல்ஃப் காரில் விளையாட்டு அரங்கை சுற்றி வந்தனர்.

போட்டிக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷாவும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார். அப்போது மரியாதை நிமித்தமாக பிரதமருக்கு அவரது படத்தையே ஜெய் ஷா பரிசாக வழங்கினார்.

இந்தக் காட்சியை பார்த்த நெட்டிசன்களும் காங்கிரஸ் கட்சியினரும் கேலியான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடியைத் தாக்கி பதிவிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "உங்கள் வாழ்நாளிலேயே உங்கள் பெயரை மைதானத்துக்கு சூட்டி, அந்த மைதானத்தில் வைத்து உங்கள் படத்தையே பரிசாகப் பெற்றுக்கொள்வது தற்பெருமையின் உச்சம்" என்று ட்வீட் செய்துள்ளார்.

Viral Video: நடுரோட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ம.பி. போலீஸ்!

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நரேந்திர மோடி மைதானத்தில் நரேந்திர மோடியின் நண்பரின் மகன் நரேந்திர மோடிக்கு நரேந்திர மோடியின் படத்தை வழங்கினார்" என்று குறிப்பிட்டு ஜெய் ஷா மோடிக்கு அவரது படத்தைப் பரிசளிக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மொட்டேராவில் உள்ள சர்தார் படேல் மைதானம் மூடப்பட்டது. பின், ரூ.800 கோடி செலவில் 132,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த மைதானத்துக்கு நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சி இந்த மைதானத்தில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குஜராத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடி மைதானத்தின் பெயரை சர்தார் படேல் ஸ்டேடியம் என மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தது. படேல் மைதானத்தின் பெயரை மாற்றி தனது பெயரைச் வைத்துக்கொண்டதற்காக மோடி வெட்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி சாடினார்.

62 வயது மூதாட்டிக்கு 25 வயது கணவர்! 8வது குழந்தைக்கு காத்திருக்கும் டிக்டாக் ஜோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios