மத்தியப் பிரதேசத்தில் காவலர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில், இரவு நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த பெண்ணுக்கு போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் அந்த இளம் பெண்ணை போலீஸ்காரர் பிடித்து இழுத்து தகாத முறையில் தொடுவதைப் பார்க்க முடிகிறது. ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்பனா டாக்கீஸ் அருகே இந்தச் சம்பவம் நடத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

SBI: உதவுவது போல் நடித்து இளம்பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் அபேஸ் செய்த ஸ்டேட் வங்கி ஊழியர்

இதற்கிடையில், முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில காவல்துறையை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது.

Scroll to load tweet…

"பாஜக ஆட்சியில், காவலர்களே வேட்டையாடுபவர்களாக மாறிவிட்டனர். போபாலில் உள்ள அல்பனா டாக்கீஸ் அருகே, இரவில் தனிமையில் நின்ற பெண்ணிடம் காவலர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது காவல்துறையின் மனிதாபிமானமற்ற முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஹனுமங்கஞ்ச் காவல் நிலையத்தின் கீழ் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது உண்மையிலேயே வெட்கக்கேடானது" என்று மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான சங்கீதா சர்மா தெரிவித்துள்ளார்.

62 வயது மூதாட்டிக்கு 25 வயது கணவர்! 8வது குழந்தைக்கு காத்திருக்கும் டிக்டாக் ஜோடி!