கல்லூரி பெண்ணுக்கு மது வாங்கிக் கொடுத்து அவரது பெண்ணுறுப்பில் மது ஊற்றி சைக்கோ தனத்தில் ஈடுபட்ட விமானியை போலீசார் கைது செய்துள்ளனர் . கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆக்ராவில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு  அவரின் பெண்ணுறுப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத இருவரால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அந்தப் பெண்ணை சைகோத்தனமாக  வன்கொடுமை செய்த விமானியை போலீசார் கைது செய்துள்ளனர் . 

இது குறித்து தெரிவித்துள்ள போலீசார் ,  ஆக்ராவில்  பட்டப்படிப்பு படிக்கும் ஒரு கல்லூரி மாணவி விமான போக்குவரத்துக்கு படிக்கும் மாணவரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆக்ராவில் உள்ள ஒரு குடியிருப்பில் வன்கொடுமையான முறையில் சித்திரவதை செய்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்,  அதாவது  ஆக்ராவில் ஏவியேஷன் டிப்ளமோ படிக்கும் தர்ஷ் கௌதம் ( 23 ) என்ற  மாணவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து  அவருடன் நட்பாக பழகி பல மாதங்களாக அவருடன் பேசி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை இருவரும் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர் . அப்போது கௌதம் அந்த பெண்ணுக்கு குடிக்க  மது கொடுத்துள்ளார் அந்தப் பெண்ணும் நன்றாக குடித்து விட்டு மதுபோதையில் மயங்கியுள்ளார்,  

அப்போது தனது சைகோதனத்தை அரங்கேற்ற தொடங்கிய  கௌதம் ,  அந்த பெண்ணின்  அந்தரங்க உறுப்பில் வோட்காவை  ஊற்றி உடலுறவு மேற்கொண்டுள்ளார்.  இதில் அந்தப் பெண்ணின் அந்த உறுப்பு கடுமையாக சேதம் ஆக்கியுள்ளது .  அதேபோல் இரவு முழுக்க கொடூரமாகவும் பலாத்காரம் செய்ததால் பெண்ணுறுப்பு காயமடைந்துள்ளது.  பிறகு அந்த பெண்ணை அங்கேயே விட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார் . அதனையடுத்து அந்த பெண்ணை பொதுமக்கள்  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர்,   தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீஸ் அந்த பெண் புகார் கொடுத்தார்,  அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஒட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சைகோ மாணவர் கௌதமை  கைது செய்தனர்.