வழக்கம் போல் ஆட்டோ ஓட்டிவிட்டு அருண் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து அவரை சரமாரியாக 20 முறை கத்தியால் குத்தியுள்ளனர். 

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை மர்ம கும்பலால் 20 முறை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கர்நாடகா மாநிலம் பெங்களூரு நியூ டிம்பர் லே அவுட்டைச் சேர்ந்தவர் அருண்(24). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு ஜனவரி மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், வழக்கம் போல் ஆட்டோ ஓட்டிவிட்டு அருண் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து அவரை சரமாரியாக 20 முறை கத்தியால் குத்தியுள்ளனர். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அருண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் அருண் கைது செய்யப்பட்ட நிலையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.