Asianet News TamilAsianet News Tamil

சொந்தம் என நம்பி, வீட்டிற்குள் விட்ட பாவம்.. 16 வயது சிறுமியை வளைத்துப்போட்டு கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர்.

காதலிப்பதாக கூறி 16 வயது சிறுமியை ஆட்டோ டிரைவர் கற்பழித்து கர்ப்பமாக்கியுள்ள கொடூரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் ஆட்டோ டிரைவர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 
 

Auto driver arrested under POCSO Act for having sex with 16-year-old girl on the pretext of love and getting her pregnant
Author
First Published Sep 7, 2022, 12:40 PM IST

காதலிப்பதாக கூறி 16 வயது சிறுமியை ஆட்டோ டிரைவர் கற்பழித்து கர்ப்பமாக்கியுள்ள கொடூரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் ஆட்டோ டிரைவர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சூது எண்ணம் கொண்ட இளைஞர்களால் பல வகைகளில் பெண்கள் மோசடி ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசும், காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வரிசையில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோ ஓட்டனர் ஒருவர் கற்பழித்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

Auto driver arrested under POCSO Act for having sex with 16-year-old girl on the pretext of love and getting her pregnant

இதையும் படியுங்கள்:  வீட்டுப் பாடம் செய்யாததால் ஸ்கேலால் அடித்த ஆசிரியர்.. கோமாவுக்கு போன 2 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.

முழு விவரம் பின்வருமாறு:-  தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நிஜாமாபாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பஞ்சராஜ், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார், இவர் அடிக்கடி மாமன் வீட்டிற்கு செல்வது வழக்கம், அவரது மாமாவுக்கு 16 வயது  மகள் பள்ளிக்கூடம் படித்து வந்தார், பஞ்சராஜ் உறவினர் என்பதால் அவர்களும் வீட்டிற்குள் அனுமதித்து வந்தனர், இதை பயன்படுத்திக் கொண்ட பஞ்ச ராஜ் மாமன் மகளிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வந்தார்.

இதையும் படியுங்கள்: போலீஸ் எச்சரித்தும்.. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. சவால் விட்ட ஓலை சரவணனை சமாதியாக்கிய கும்பல்.! 

ஒரு கட்டத்தில் அந்த சிறுமியும் யோகராஜ் கூறியதை நம்பினார், சிறுமியின் வயது கோளாறைப் பயன்படுத்துக்கொண்டா ஆட்டோ ஓட்டுநர் பஞ்சராஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியுடன் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டு வந்தார். பல நேரங்களில் விருப்பத்திற்கு மாறாக சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார், இதை பெற்றோரிடம் சொன்னால் பிரச்சினையாகும் என அஞ்சலி அவர் நடந்தவற்றை மறைத்து வந்தார். ஆனால் அந்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்ட பெற்றோர் மருத்துமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். 

Auto driver arrested under POCSO Act for having sex with 16-year-old girl on the pretext of love and getting her pregnant

அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது, இது குறித்து அவரிடம் விசாரித்ததில் தன்னை ஆட்டோ ஓட்டுனர் யோகராஜ் காதலிப்பதாக கூறி தனிமையில் இருக்கும்போது பலமுறை உடலுறவில் ஈடுபட்டு வருவதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்,, ஆட்டோ ஓட்டுனர் யோகராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் யோகராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ஆட்டோ ஓட்டுனர் யோகராஜ்ஜை கைது செய்துள்ளனர். விஷயம் வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என்ற அச்சத்தில் குடும்பத்தினர் கதறி வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios