புருஷனை கழற்றிவிட்டு 2 கள்ளக்காதலனை க்ரெக்ட் செய்த பெண்! உல்லாசத்திற்காக போட்டா போட்டி! இறுதியில் நடந்த பகீர்

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மனைவி பூமிகா (23). இவர் இன்ஸ்டாகிராமில் நடிகைபோல் சித்தரித்து அடிக்கடி பாடல்கள் பாடி பதிவிட்டு வந்தார். இதனால், பூமிகாவுடன் பலர் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த கணவர் பிரகாஷ் மனைவியை கண்டித்தார். 

auto deiver murder case... Women Suicide in cuddalore

கள்ளக்காதலி யாருக்கு சொந்தம் என்பதில் போட்டா போட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார். இதனால், மனவேதனையில் இருந்த வந்த கள்ளக்காதலி தற்கொலை செய்து கொண்டார். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் பிரகாஷ். அவரது மனைவி பூமிகா (23). இவர் இன்ஸ்டாகிராமில் நடிகைபோல் சித்தரித்து அடிக்கடி பாடல்கள் பாடி பதிவிட்டு வந்தார். இதனால், பூமிகாவுடன் பலர் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த கணவர் பிரகாஷ் மனைவியை கண்டித்தார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். 

auto deiver murder case... Women Suicide in cuddalore

அப்போது பண்ருட்டியில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு செல்லும்போது தட்டாஞ்சாவடி காந்திநகர் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்துள்ளனர். அதேபோல், சக்திவேலின் நண்பரும், ஆட்டோ டிரைவருமான சுமன் என்பவரும் பூமிகாவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இருவரும் ஒரே பெண்ணுடன் நெருங்கி பழகி வருவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று தட்டாஞ்சாவடி காளியம்மன் கோயில் செடல் திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சக்திவேலும், சுமனும் இரவில் அப்பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே அந்த பெண் யாருக்கு சொந்தம் என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுமனும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து சக்திவேலை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

auto deiver murder case... Women Suicide in cuddalore

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த சுமன், பட்டிஸ்டா குணா, வசந்தகுமார், குணா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, இந்த சம்பவத்தை அறிந்த பூமிகா மனஉளைச்சல் ஏற்பட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில்  மயங்கி கிடந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்ததினர் பூமிகாவை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பூமிகா பரிதாபமாக உயிரிழந்ததார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios