கரூர் மாவட்டம் தோகைமலை ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சங்கீதா. இவர்களுக்கு பெரியநாயகி, பாண்டி மீனா, சந்தோஷ்குமார், பொன்னர், ரத்தினம் ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு தங்கவேல் உடல்நிலை சரியில்லாததால் இறந்து விட்டார். இதனால் சங்கீதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், அவரது வீட்டின் அருகில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் கிளி ஜோசியம் பார்த்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் சங்கீதாவுடன் பழகி வந்துள்ளார். மேலும் கணவனை இழந்து தனியாக வசித்து வந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட கிளி ஜோசியக்காரன் சங்கர், சங்கீதாவுக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளான்.

இதனால் பயந்து போன சங்கீதா, தனது பெற்றோர் ஊரான கீழ வெளியூருக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். ஆனாலும் விடாத கிளி ஜோசியக்காரன் சங்கர் கீழவெளியூருக்கு சென்றும் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் தொல்லை கொடுத்துள்ளான்.

இதனால் மனமுடைந்த சங்கீதா கல்லடை அருகே உள்ள தரிசி காட்டில் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கீதாவின் சகோதரர் சதீஷ் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கீதாவுக்கு கிளி ஜோசியக்காரன் சங்கர் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததும், இதனால் சங்கீதா தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சங்கரை கைது செய்தனர்.