ஹரியானா மாநிலம், மகேந்தர்கார் மாவட்டம் கனைனா நகர் பேருந்து நிலையத்தில் கடந்த புதன்கிழமை நின்றிருந்த மாணவியை காரில் கடத்திச் சென்ற சிலர், ரிவாரி பகுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் தொடர்புடைய ராணுவ வீரர் பங்கஜ், நிஷூ, மணீஷ் என்ற மூன்று முக்கியக் குற்றவாளிகளின் படங்களை காவல்துறை வெளியிட்டது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டபோது மாணவியின் உடல்நிலை மோசமானதால், அவர் இறந்து விடக் கூடும் என அஞ்சிய கொடூரக் கும்பல், மருத்துவரை அழைத்து வந்து சிகிச்சையளிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. அந்த மருத்துவரின் சாட்சியம் இந்த வழக்கில் முக்கியமானது என்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் உரிமையாளர் தீன் தயாள் என்ற நபரை சிறப்புப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். எனினும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள  மூன்று பேரில் ஒருவர் கூட இதுவரை போலீசாரிடம் சிக்கவில்லை.

இந்த இடைப்பட்ட நேரத்தில், சில அரசு அதிகாரிகள் தங்களது வீட்டுக்கு வந்து இழப்பீடு காசோலையைக் கொடுத்ததாகவும், அதனை வாங்க தாங்கள் மறுத்துவிட்டதாகவும்  கற்பழிக்கப்பட்ட மாணவியின் தாயார் கூறியுள்ளார். ஹரியானாவில் 19 வயது மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகேந்தர்கார் மாவட்டம் கனைனா நகர் பேருந்து நிலையத்தில் கடந்த புதன்கிழமை நின்றிருந்த மாணவியை காரில் கடத்திச் சென்ற சிலர், ரிவாரி பகுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் தொடர்புடைய ராணுவ வீரர் பங்கஜ், நிஷூ, மணீஷ் என்ற மூன்று முக்கியக் குற்றவாளிகளின் படங்களை காவல்துறை வெளியிட்டது.  இந்நிலையில், பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடைபெற்ற இடத்தின் உரிமையாளர் தீன் தயாளை போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட மாணவிக்கு சம்பவ இடத்திற்கு சென்று சிகிச்சை அளித்த மருத்துவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.