Asianet News TamilAsianet News Tamil

காதலுக்கு நோ சொன்ன தந்தை... மகளை இரும்புக் கம்பியால் அடித்து பூச்சிமருந்து குடிக்க வைத்த துயரம்

தந்தை பூச்சிக்கொல்லியை வாயில் ஊற்றியதை அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பெண் ஒரு வாரத்துக்கு மேலாக உயிருக்குப் போராடி வந்தார்.

Angry over inter-faith relationship, Kerala engineer forces teen daughter to drink herbicide sgb
Author
First Published Nov 8, 2023, 8:38 PM IST

கேரளாவில் 43 வயதான எஞ்சினியர் ஒருவர், வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது மகளை இரும்புக் கம்பியால் தாக்கி, பூச்சிக்கொல்லி மருந்தை வற்புறுத்திக் குடிக்க வைத்துக் கொன்றிருக்கிறார்.

தந்தை பூச்சிக்கொல்லியை வாயில் ஊற்றியதை அடுத்து அக்டோபர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பெண் ஒரு வாரத்துக்கு மேலாக உயிருக்குப் போராடி வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்துவிட்டார்.

பலியான பெண்ணின் தந்தை அபீஸ் முகமது கொச்சியில் உள்ள வல்லார்பாடத்தில் கண்டெய்னர் டிரான்ஸ்ஷிப்மென்ட் டெர்மினலில் பொறியாளரான வேலை பார்க்கிறார். பெண் பலியானதை அடுத்து ஆலுவா மேற்கு காவல்துறையினர் அவரைக் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

சப்பாத்தியை ஒத்தையில சாப்பிட்ட அக்கா... பசியோடு தூக்கில் தொங்கிய 10ஆம் வகுப்பு மாணவி!

Angry over inter-faith relationship, Kerala engineer forces teen daughter to drink herbicide sgb

அபீஸின் தனது மகள் பள்ளியில் படித்த வேற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பையனுடன் பழகுவதை அறிந்து கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பையனுடன் பழகுவதை நிறுத்துமாறு மகளை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். பின்னர், மகளுக்கும் அந்தப் பையனுக்கும் தொலைபேசியில் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து மகளிடம் இருந்த மொபைல் போனையும் பறித்துக்கொண்டிருக்கிறார்.

அதற்கும் பிறகும் மகள் வேறு மொபைலில் இருந்து அந்தப் பையனுடன் தொடர்ந்து பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. இது தெரிந்ததும் பெரும் ஆத்திரம் அடைந்த அபீஸ் மகளை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயங்கள் அடைந்த மகளுக்கு பூச்சிக்கொல்லியை வாயில் ஊற்றிக் குடிக்க வைத்துள்ளார். அபீஸின் இந்த வெறிச்செயலுக்குப் பின் பெண்ணின் தாய் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார்.

போலீசார் அபீஸ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஒரு கிராம் தங்கம் ரூ.6,300! தீபாவளியை முன்னிட்டு விண்ணை முட்டும் தங்கம் விலை! காரணம் என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios