Asianet News TamilAsianet News Tamil

சப்பாத்தியை ஒத்தையில சாப்பிட்ட அக்கா... பசியோடு தூக்கில் தொங்கிய 10ஆம் வகுப்பு மாணவி!

அக்கா சப்பாத்தி கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டதால் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஊர்மக்கள் அனைவரையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

10th student dies after her sister refuses to share Chapathi sgb
Author
First Published Nov 8, 2023, 12:43 AM IST | Last Updated Nov 8, 2023, 12:53 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த மேலபெருவிளை என்ற ஊரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தங்ககனி. இவர்களுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள்கள் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரே மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இன்னும் இரண்டு பெண்கள் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பும், 10ஆம் வகுப்பும் படிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் தங்கை அம்மாவிடம் சாப்பிட ஏதாவது கேட்டிருக்கிறார். அதற்கு தாய் சமையல் அறையில் உள்ள சப்பாத்தியை எடுத்துச் சாப்பிடுமாறு கூறியிருக்கிறார். அங்கு சென்று பார்த்தபோது, அக்கா சப்பாத்தியைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார்.

அதைப் பார்த்த தங்கை அக்காவிடம் மிச்சம் இருந்த பாதி சப்பாத்தியையாவது தனக்குத் தருமாறு  கேட்டிருக்கிறார். ஆனால், அக்கா அதைக் கொடுக்க மறுத்து எஞ்சிய சப்பாத்தியையும் தானே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த 10ஆம் வகுப்பு சிறுமி கோபித்துக்கொண்டு வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டுவிட்டார்.

133 லேப்டாப்களைத் திருடிய ஹை-டெக் திருடன்! வலைவீசி சிக்க வைத்த பெங்களூரு போலீஸ்!

10th student dies after her sister refuses to share Chapathi sgb

வீட்டில் இருந்த அம்மாவும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் எத்தனை முறை கதவைத் தட்டிக் கூப்பிட்டும் திறக்கவில்லை. இதனால், அறையின் மேற்புறத்தில் இருந்த ஓட்டைப் பிரித்துப் பார்த்தபோது, சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயல்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் திங்கட்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் இறந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அக்கா சப்பாத்தி கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டதால் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஊர்மக்கள் அனைவரையும் சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

இந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் எழுந்தால் உடனடியாக 9152987821 என்ற எண்ணை அழைத்து ஆலோசனை பெறலாம்.

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம்: அண்ணாமலை பேச்சு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios