Asianet News TamilAsianet News Tamil

ஒரு கிராம் தங்கம் ரூ.6,300! தீபாவளியை முன்னிட்டு விண்ணை முட்டும் தங்கம் விலை! காரணம் என்ன?

தற்போதைய போக்கின் அடிப்படையில் தீபாவளியை ஒட்டி தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.6,300 வரை எட்டக்கூடும் என்று அறிக்கை கணித்துள்ளது.

Gold prices to reach Rs 63,000 during Diwali, says report sgb
Author
First Published Nov 8, 2023, 7:47 PM IST | Last Updated Nov 8, 2023, 8:09 PM IST

நகை பிரியர்கள் தீபாவளி சீசனில் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிவருகிறார்கள். இச்சூழலில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை ரூ.63,000 வரை உயரக்கூடும் என்று மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

மாறிவரும் மத்திய வங்கிக் கொள்கைகள், புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை காரணமாக  இந்த ஆண்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பண்டிகைக் காலங்களில் தங்கத்தின் தேவை பொதுவாக உயரும். அதே வேளையில், முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட  முதலீடு செய்ய சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருப்பார்கள். ஆனால் இந்த தீபாவளி சீசனில் பல முதலீட்டாளர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை சமீபத்திய போக்குகள் குறிப்பிடுகின்றன என்றும் அறிக்கையில் கூறப்படுகிறது.

தீபாவளி பரிசு! தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு நிதி முன்கூட்டியே விடுவிப்பு!

இதனால், தற்போதைய போக்கின் அடிப்படையில் டிசம்பர் 5, 2023 அன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,044 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டடுள்ளது. 

Gold prices to reach Rs 63,000 during Diwali, says report sgb

இந்த ஆண்டு, சீனா, போலந்து, துருக்கி, கஜகஸ்தான் மற்றும் பிற நாடுகளில் மத்திய வங்கிகளின் தங்கக் கையிருப்பு கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தும் முடிவை எடுத்திருக்கிறது. இதனால், அந்நாட்டின் வங்கிகள் தங்கள் நிதிக் கொள்கையில் மாற்றம் செய்தவற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், ஊதிய உயர்வு, எரிசக்தி செலவுகள் மற்றும் உணவு விலைகள் காரணமாக கவலைகள் நீடிக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பணவீக்கக் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே கவனமாக சமநிலையைப் பேணவேண்டிய தேவை இருக்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தங்கத்தின் விலையை உயர்த்துவதில் புவிசார் அரசியல் முன்னேற்றங்களும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. நெருக்கடி காலங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கக் காரணமாகியுள்ளது. இதன் விளைவாக, தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.6,300 வரை எட்டக்கூடும் என்று அறிக்கை கணித்துள்ளது.

Today Gold Rate in Chennai : மக்களே சொன்னா நம்பமாட்டீங்க.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios