மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் குடிபோதையில் இருந்த கணவன் தனது 3 வயது பச்சிளம் குழந்தையை காலை பிடித்து தரையில் அடித்து, கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தா புறநகர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் வம்பிழுக்கும் ராஜு,  இன்று அதிகாலையிலேயே அளவுக்கு அதிகமாக சரக்கு அடித்துவிட்டு வந்து, வழக்கம்போல தனது மனைவி அப்சாரியிடம் வம்பிழுத்துள்ளான்.  அப்போது வீட்டிலுள்ள பாத்திரங்களை உடைத்து மனைவியை திட்டியுள்ளான்.

அப்போது கணவன் - மனைவிக்குள் பயங்கர சண்டை முற்றியது. அப்போது போதையில் இருந்த அந்த நயவஞ்சகன், படுக்கையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அந்த குடிகாரன் காலை பிடித்து இழுத்து தரையில் போட்டுள்ளான், தனது மனைவியின் கண்முன்னே அந்த குழந்தையை கீழே வீசியதும் தரையில் விழுந்த குழந்தை பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தது. பதறிப்போன மனைவி குழந்தையை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஓடினார். ஆனால், குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினார்கள். 

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து, விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரித்ததில், சில திடுக் தகவல்கள் வெளியானது. அதில் அவருக்கு அந்த குழந்தை பெண் குழந்தை பிறந்தது விருப்பம் இல்லையாம், இதனால் குழந்தை பிறந்ததிலிருந்து அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து தனது மனைவியிடம் சண்டை போடுவது. குழந்தையை பார்த்து அசிங்க அசிங்கமாக திட்டுவது என தொடர்ந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.