Asianet News TamilAsianet News Tamil

கணவரின் அந்தரங்க உறுப்பில் பிளேடு போட்ட மனைவி! முதல் மனைவியின் ரீல்ஸ் வீடியோவைப் பார்த்ததால் ஆத்திரம்!

முதல் மனைவியின் வீடியோவைப் பார்த்ததற்காக மனைவியே கணவரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் அறுத்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Andhra woman cuts husband's genitals for watching first wife's Instagram reels
Author
First Published Jul 22, 2023, 11:13 PM IST

ஆந்திராவின் என்டிஆர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பார்த்ததற்காக தனது கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் வெட்டியுள்ளார். இந்த கொடூர சம்பவம் நந்திகமவில் உள்ள ஐயப்பா நகரில் நடந்துள்ளது.

சந்தர்லபாடு மண்டல் முப்பல்லா கிராமத்தைச் சேர்ந்த கோட்டா ஆனந்த் பாபு என்பவர் ஏற்கெனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் மனைவியைப் பிரிந்தார். பின், ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரம்மா என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

கடந்த ஐந்து மாதங்களாக முப்பள்ளாவில் மனைவி வரம்மாவுடன் வசித்து வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை, பாபு தனது முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்களைப் பார்ப்பதை வரம்மா கவனித்துவிட்டு, அவரிடம் அதுபற்றி விசாரிக்கத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.

பைக்கில் சுய இன்பம் செய்துவிட்டு பெண்ணுக்கு 'லவ் யூ' மெசேஜ் அனுப்பிய ராபிடோ டிரைவர்

Andhra woman cuts husband's genitals for watching first wife's Instagram reels

அப்போது ஆத்திரத்தில் வரம்மா பாபுவின் ஆணுறுப்பை பிளேடால் வெட்டிவிட்டார். கடுமையான ரத்தக்கசிவு காரணமாக பாபு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டார். இந்த விவகாரத்தில் போலீசார் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது வாக்குவாதம் வருவது சகஜம்தான். ஆனால், முதல் மனைவியின் வீடியோவைப் பார்த்ததற்காக மனைவியே கணவரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் அறுத்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆன்லைனில் ரூ.10 லட்சத்தை பறிகொடுத்தவருக்கு 8 அட்வைஸ்! எஸ்பிஐ சொல்வது என்னென்ன தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios