சென்னையில் முன்விரோதம் காரணமாக அதிமுக பிரமுகருக்கு சரமாரியாக அரிவாளால் வெட்டி விழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரம் ராஜாஜி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (46). 8-வது வார்டு அதிமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது, விஜயகுமாருக்கும் சிலருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் விஜயகுமாரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு 3 பேர் தப்பினர். படுகாயமடைந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசாருக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.