என்னுடைய லவ்வரை கரெக்ட் செய்ய பாக்குறியா.. பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய காதலி.. சென்னையில் பயங்கரம்..!

லேகா பார்த்திபன் என்பவரை காதலித்து வந்ததாகவும் பின் அந்த காதல் முறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின் பார்த்திபனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். 

Acid attack on woman in love affair.. 2 people Arrest in chennai

சென்னை மதுரவாயலில் காதல் விவகாரதத்தில் பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் வீசியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை மதுரவாயல் பகுதியைச்  சேர்ந்தவர் லேகா (30). நேற்றைய தினம் இவரது வீட்டிற்கு ஐஸ்வர்யா என்ற பெண் சென்று கதவை தட்டியுள்ளார். அப்போது, லேகா கதவை திறந்ததும் தான் கையில் வைத்திருந்த கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை லேகா மீது ஊற்றி உள்ளார். இதில், லேகா மற்றும் அவரது தயார் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளனர். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Acid attack on woman in love affair.. 2 people Arrest in chennai

இதுதொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து  ஐஸ்வர்யா (37), தீனதயாளன் (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லேகா பார்த்திபன் என்பவரை காதலித்து வந்ததாகவும் பின் அந்த காதல் முறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்பின் பார்த்திபனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். 

Acid attack on woman in love affair.. 2 people Arrest in chennai

இதனிடையே, லேகா மீண்டும் பார்த்திபனை காதலிப்பதை அறிந்ததும் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா தீனதயாளனை அழைத்து கொண்டு வீட்டில் இருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை கொண்டு சென்று இருவர் மீதும் ஊற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios