Asianet News TamilAsianet News Tamil

எவ்ளோ பெரிய ஆளு ஏசி சண்முகம், கையில ஸ்ரீ குமரன் சில்க்ஸ் பையோடு போகும் பரிதாபம்!! டெல்லியில் நடந்த சோகம்

பிஜேபி கொடுத்த விருந்தில் தமிழக தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த தடபுடல் விருந்தில் சுவாரஸ்ய பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

AC Shanmugam photo viral on internet
Author
Chennai, First Published May 22, 2019, 6:24 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பிஜேபி கொடுத்த விருந்தில் தமிழக தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த தடபுடல் விருந்தில் சுவாரஸ்ய பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை கண்டுகொள்ளாத அமித் ஷா மற்றும் மோடி திடீர் என கட்சித் தலைவர்களுக்கு டெல்லியில் விருந்து வைத்து அசத்தினர். இந்த தடபுடல் விருந்துக்கு காரணமே, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது பிஜேபி என்ற எக்ஸிட் போல் ரிசல்ட் தான். இந்த எக்ஸிட் போல் ரிசல்டால் உற்சாகத்தில் இருக்கும் அமித்ஷா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு தடபுடலாக விருந்து அளிக்க ஏற்படு செய்தார். 

AC Shanmugam photo viral on internet

இந்நிலையில், டெல்லி அசோகா ஹோட்டலில் நேற்று இரவு  நடந்த இந்த  விருந்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி,ஓ பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், தேமுதிக சார்பில் பிரேமலதா, ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரும் விருந்தில் பங்கேற்றனர். 

சிறிய அளவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தமிழகத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் மட்டுமே ஏற்றப்பட்டனர். மற்ற அனைவரும் கீழே இருக்கை அமைக்கப்பட்டு அங்கு அமர வைக்கப்பட்டிருந்தனர்.  மத்திய அமைச்சர் பதவி ஆசையில் சென்ற அன்புமணி ராமதாஸ், கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் அமித் ஷாவை நெருங்க கூட முடியாமல் திரும்பி வந்த சம்பவம் நடந்தது. அதேபோல ஸ்ரீ குமரன் சில்க்ஸ் பையோடு மோடியை சந்திக்க முயன்ற ஏசி சண்முகத்தால் முடியாமல் போனதால் எடுத்துக்கொண்டு சென்ற பையை மீண்டும் எடுத்து வந்துவிட்டார்.

AC Shanmugam photo viral on internet

ஆரணியைச் சேர்ந்த ஏசி சண்முகம் 26 வயதில் MLA, 30 வயதில் எம்பி, 35 வயதில் காலேஜ் சேர்மேன், சென்னையில் பிரதான பகுதியில் ஒரு கிரவுன் பல கோடி மதிப்புள்ள 100  ஏக்கரில் நிலத்துடன் கூடிய MGR யூனிவர்சிட்டி மற்றும் கல்லூரிகள், பூந்தமல்லியில் ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரி, வானகரத்தில் தாய் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி, ஆரணியில் ஏசிஎஸ் பொறியியல் கல்லூரி, ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, பாலாஜி காலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை தி நகரில் பென்ஸ் பார்க் ஹோட்டல், வேலூரில் பென்ஸ் பார்க் ஹோட்டல், பெங்களூரு பிரதான பகுதியில் ராஜ ராஜேஷ்வரி பொறியியல் கல்லூரி மற்றும்  மருத்துவக் கல்லூரி என அடுக்கிக்கொண்டே சொல்லலாம் கல்லூரிக்கு  பெட்ரோல் போடுவதற்காகவே மூன்று பெட்ரோல் பங்க் இருக்கிற தென்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அப்படி ஒரு பணக்காரர். இப்படிப்பட்ட பணக்காரரான ஏசி சண்முகம் டெல்லியில் மோடியை பார்க்க சென்ற போது கையில் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் பையை கையில் வைத்துக்கொண்டு பரிதாபமாக நடந்து செல்லும் போட்டோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

AC Shanmugam photo viral on internet

ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்த மனுஷன், எம்பி ஆகும் ஆசையில், வேகாத வெய்யிலில் தலையில் குல்லா கூட போடாமல் பிரசார வாகனத்தில் நின்றுகொண்டு சுற்றி சுற்றி ஓட்டு கேட்டும், சுமார் 100 கோடிக்கு மேல் செலவு செய்தும் ஒரு புரியோஜனமும் இல்லாமல் ஆக்கிய துரைமுருகன் மற்றும் கதிர்ஆனந்த் மீது செம்ம காண்டில்இருந்த சமயத்தில் டெல்லிக்கு வரவழைத்த பிஜேபி தலைமை, குமரன் சில்க்ஸ் பையை தூக்கிக்கொண்டு அலைய விட்டுள்ளது. இதில் கொடுமை என்னன்னா? இந்த விருந்து நிகழ்ச்சி முடியும் வரை பாவம் மோடிக்கு போர்த்த கொண்டு சென்ற அந்த பையை கையிலேயே வைத்து சுற்றி சுற்றி வந்துள்ளார். பாவம் அது நடக்காமலேயே போன பரிதாபத்தை உச்சம் இந்த பரிதாபத்தை உச்சத்தை தொட்ட  இந்த போட்டோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகின்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios