கள்ளக் காதலர்கள் அபிராமியும், சுந்தரமும் நேருக்கு நேர் சந்திப்பு !! என்ன செய்தார் தெரியுமா அபிராமி ?

கள்ளக்காதலுக்காக குழந்கைகளை விஷம் வைத்துச் கொன்ற அபிராமியையும், அவரது கள்ளக் காதலன் சுந்தரத்தையும் போலீசார் ஒரே வேனில் நேற்று கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கறுப்பு துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொண்டு வந்த அபிராமி , எதிரில் அமர்ந்திருந்த சுந்தரத்தைப் பார்த்ததும் கண்ணீர்விட்டு அழுதார்.

abirami and sundaram in court and meet

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார், மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர், விஜய், தனியார் வங்கி ஊழியரான . இவரது மனைவி அபிராமி.  இவர்களுக்கு அஜய், மற்றும் கார்னிகா என்ற குழந்தைகள் இருந்தனர்.

குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம், என்பவருடன்  அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த மாதம், 31 ஆம் தேதி  குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தார்.

abirami and sundaram in court and meet

இதையடுத்து கள்ளக்காதலன், சுந்தரத்தை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அபிராமியை, நாகர்கோவிலில் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு விசாரணைக்காக, புழல் சிறையில் இருந்து, அபிராமியையும், கள்ளக்காதலன் சுந்தரத்தையும், ஒரே வாகனத்தில் நேற்று அழைத்து வந்த போலீசார், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட், சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.

abirami and sundaram in court and meet

விசாரணைக்கு பின், இருவரின் நீதிமன்ற காவலை, வரும்,12 வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து, கள்ளக்காதலர்கள் அபிராமியும், சுந்தரமும் மீண்டும் புழல் சிறைக்கு, பலத்த பாதுகாப்புடன், ஒரே வேனில் அழைத்து செல்லப்பட்டனர்.

ஒரே வேனில் வந்த போதிலும், இருவரும் தனித்தனியாக, சுற்றிலும் ஏராளமான போலீசாருடன் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரையும் கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வேனில் ஏற்றியபோது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

abirami and sundaram in court and meet

அப்போது அபிராமி கண்ணீர்விட்டு அழுதார். ஆனால் சுந்தரம் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார். வேனில் இருந்து இறங்கி, நீதிமன்றத்திற்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும், அபிராமி தன் முகத்தை கருப்பு துப்பட்டாவால் மூடியிருந்தாள்.

வழக்கு முடிந்து, புழல் சிறைக்கு செல்வதற்காக, வேனில் அபிராமி அமர்ந்து இருந்த போது, கண் கலங்கிய படி, சோர்வாக இருந்தார் அபிராயைப் பார்க்க அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை. ஆனால்  சுந்தரத்தை பார்ப்பதற்காக, அவரின் காதல் மனைவியும், நீதிமன்றம் வந்திருந்தார். அவரும்  மிகவும் சோகமாக காணப்பட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios