பாவாடையுடன் குளித்து கொண்டிருந்த 57 வயது பெண்ணை கரைக்கு தூக்கி சென்று இளைஞர் செய்த காரியம்..!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாய்க்காலில்  குளித்து கொண்டிருந்த 57 வயது பெண்ணை தூக்கி சென்று கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம்  செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

A young man who tried to rape a 57-year-old woman

குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாய்க்காலில்  குளித்து கொண்டிருந்த 57 வயது பெண்ணை தூக்கி சென்று கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம்  செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நரிக்கல் அடுத்த வெள்ளியாக்குளம் பகுதியை சேர்ந்த அய்யப்பன். அவரது மகன் சிவா(22). இவர் மீது ஏற்கனவே குளச்சல், மண்டைக்காடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை தொடர்பான வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் இரும்புலி பகுதியை சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் வாய்க்காலில் துணி வைத்துக் கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு சென்ற சிவா அந்த பெண்ணை வாயை பொத்தி வாய்க்காலின் மறுகரைக்கு  கடத்தி சென்று கீழே தள்ளி கத்தியை காட்டி  மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பெண்ணின்  சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள்  திரண்டனர். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து  தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios