பெரம்பலூரில் வசித்து வரும் பச்சபிள்ளை மற்றும் கொவிந்தம்மாள் தம்பதிகளுக்கு ஆறு வயதில் ரஞ்சிதா என்ற மகள் உள்ளார். 

கோவிந்தமாளுக்கு இரண்டாவதாக, ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என பெரும் எதிர்பார்ப்பில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கருவுற்று இருந்த கோவிந்தம்மாள் தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்குமென எதிர்பார்த்து இருந்துள்ளார். ஆனால் பிறந்தது பெண் குழந்தை. இதனால் விரக்தி அடைந்து இருந்த கோவிந்தம்மாள், தான் பெற்ற பிள்ளை என்று கூட பார்க்காமல், பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி துடிக்க  துடிக்க கொன்று உள்ளார் மனித மிருகமான இந்த  தாய்.

இது குறித்தது போலீசாருக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டதில், தனக்கு யாரோ மயக்க மருந்து கொடுத்து விட்டு குழந்தையை கடத்தி சென்று விட்டதாக பொய் தகவல் தெரிவித்து நாடகமாடி உள்ளார்.

ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் கோவிந்தம்மாவிடம் துருவி துருவி கேள்வி கேட்டதில், தானே குழந்தையை கொன்று உள்ளதை ஒப்புக் கொண்டார். அதனை தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.