தனியாக சென்ற காதல் ஜோடி.! நாட்டு துப்பாக்கியால் காதலனை சுட்டு கொன்ற கும்பல்..!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே அடர்ந்த காட்டு வழியாக  இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்ஜோடியை குறிவைத்து தாக்கி, தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் காதலனை சுட்டு வீழ்த்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ளது சறுக்கு என்ற பகுதி இந்த பகுதியில் இருந்து இளம் ஜோடி இருசக்கரவாகனத்தில் அருகிலுள்ள காட்டு வழியாக பயணித்து உள்ளனர். அப்போது பேட்டை என்ற பகுதியில் இருந்து நால்வர் அடங்கிய ஒரு கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து தன்னுடன் வந்த காதலனை சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. அந்த பெண் கூச்சலிடவே அவ்வழியாக சென்று கொண்டிருந்த மற்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் ஓடி வந்து அப்பெண்ணை காப்பாற்றி உள்ளனர்.

இதுகுறித்து  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இறந்தவர் யார்? அவருக்கும் இந்த பெண்ணிற்கும் என்ன தொடர்பு ? எதற்காக இந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர் என பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.