சென்னை குன்றத்தூரில் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப் பட்டு உள்ள அபிராமி மிகவும்  mana உளைச்சலுக்கு ஆளானதாக  கூறப்படுகிறது. அவர்  தினமும் தான் செய்த தவறை பற்றி சிந்தித்துக் கொண்டே,  அழுதுகொண்டே உள்ளாராம். 

 அபிராமியை  சந்தித்த வழக்கறிஞர்  ஒரு  பிரபலம் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். 

அப்போது  குழந்தையை கொலை செய்யும் மனது எப்படி உங்களுக்கு வந்தது ? என்ற  கேள்விக்கு  பயங்கரமாக அழுதுள்ளார் அபிராமி .. அப்போது சிறை காவலாளிகள்  விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்.. இல்லை என்றால் அமைதியாக  இருங்கள் என  கூறி   உள்ளனர் . அதற்கு இல்லை நான் பேசுகிறேன் என  கூறி  தொடர்ந்து பேசி உள்ளார். 

 அபிராமிக்கு  பிரியாணி கடை சுந்தரனுடன்  வாழ  வேண்டும் என  முடிவு எடுத்த பின்பு தான் இப்படி  ஒரு விபரீத முடிவு எடுத்துள்ளாராம் அபிராமி. மேலும் குழந்தை கொலையில் சுந்தரத்துக்கு தொடர்பு உள்ளதா..? என்ற கேள்விக்கு சிறிது நேரம் கழித்து மெதுவாக இல்லை என்று கூறினாராம்.

பின்னர், குழந்தை பற்றி மீண்டும் பேசிய போது "குழந்தையை கொன்ற எனக்கு மன்னிப்பே  கிடையாது...என கூறி தொடர்ந்து அழுதுள்ளார்.மேலும்  நான் தூங்காமல் தினமும் செத்துக்கொண்டிருக்கிறேன் என அபிராமி கூறியதுடன். இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என துக்கம் அடைத்துக் கொண்ட குரலோடு பேசி உள்ளார். 

மேலும் அடுத்த வாரம் வாங்க உண்மையை சொல்கிறேன் என கூறி விட்டு அழுத்துக்கொண்டே  வேகமாக அறைக்கு சென்று உள்ளார்.மேலும் மன உளைச்சல்  உள்ளதால் அவருக்கு  மருத்துவ  கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறதாம்.