பிகார் மாநிலத்தில் 80 வயது மூதாட்டி, 15 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிகார் மாநிலம், ஜமாலியா கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது உறவுக்கார சிறுவன் அங்கிருந்துள்ளான். பாட்டி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது வாயில் துணியை வைத்து அடைத்து அந்தச் சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

மீண்டுவிட முயற்சி செய்த பாட்டியால் முடியவில்லை. மூதாட்டியின் அழுகை குரலைக் கேட்ட குடும்பத்தினர், சிறுவனை பிடித்து அடித்து, காவல்துறையிடன் ஒப்படைத்துள்ளனர்.  உறவினர்கள் சிறுவனை தாக்கியதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது சிறுவனிடம் இருந்து மீட்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீதிமன்ற காவலில் சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.