துர்கா பூஜை நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்த இந்து அமைப்பினர், அவ்வழியாக சென்ற இஸ்லாமிய முதியவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

பீகாரில் துர்கா பூஜை செய்வதற்காக இந்து அமைப்பினர் தடல்புடலான ஏற்பாடுகளை செய்தனர். இதனால், அந்த பகுதிகளில் இஸ்லாமியர்கள் செல்ல தடை விதித்தனர். இதையொட்டி அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி வந்தது. 

மேலும் போலீஸ் பாதுகாப்புடன், இஸ்லாமியர்களின் வீடுகளில் புகுந்து, அங்குள்ள பொருட்களை சூறையாடுவதும், வீடுகளுக்கு தீ வைத்து எரித்தும் இந்து அமைப்பினர் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 80 வயது, இஸ்லாமிய முதியவர் ஒருவர், தனது மகள் வீட்டில் இருந்து சொந்த ஊர் புறப்பட்டார். அவரை, செல்ல வேண்டாம் என மகள் தடுத்துள்ளார். அதற்கு, வயதான என்னை யார் என்ன போகிறார்கள் என கூறிவிட்டு, அவர் சென்றார். 

ஆனால், அந்த இஸ்லாமிய முதியவரை அடித்து கழுத்தறுத்து உயிரோடு கொளுத்தியுள்ளனர் இந்த அமைப்பினர். அந்த முதியவர் வெளியே செல்லும்போது வேண்டாமென மகள் எச்சரித்திருக்கிறார்   அவேரோ, யார் என்ன செய்யப்போகிறார்கள் என பொதுச்சமூகத்தின் மனிதத்தை நம்பி வெளியே வந்தார். ஆனால், பரிதாபமாக இறந்தார்.